தமிழ் நாடு

பணவசதி இல்லாதவங்க எதுக்கு எங்க ஹாஸ்பிட்டலுக்கு வரணும்..? தி.மு.க வேட்பாளரின் மருத்துவமனையில் பரிதாபமாக பலியான நோயாளி..!

தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்தது குறித்து திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணனின் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை நிலையூர் பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்ற பெண் உடல்நல குறைவு காரணமாக நரிமேடு பகுதியில் உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி திமுக வேட்பாளர் சரவணனுக்கு சொந்தமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் தவறான சிகிச்சையால் பஞ்சவர்ணம் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிக பணம் செலுத்தி சிகிச்சை பார்க்க வசதி இல்லாத தாங்கள் ஏன் தங்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வர வேண்டும் என திமுகவின் சரவணன் தரப்பினர் அநாகரீகமாக பேசியதுடன் பஞ்சவர்ணத்தின் குடும்பத்தினரை மிரட்டியதாகவும் தெரிகிறது.

இந்தநிலையில் பஞ்சவர்ணத்தின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் தல்லாக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதையடுத்து, திமுக வேட்பாளர் சரவணனின் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close