செய்திகள்

“வெளிநாட்டு கைகூலி என்.ஜி.ஓக்களால் இந்தியாவில் போராட்டங்கள் தூண்டிவிடப்படுகின்றன” – பிரதமர் நரேந்திர மோடி பகிரங்கமாக அறிவிப்பு!!

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், ”இந்தியாவில் நடக்கும் போராட்டங்கள் அனைத்தும் வெளிநாட்டு நிதியில் இயங்கும் என்.ஜி.ஓக்களால் தூண்டிவிடப்படுகின்றன” என்று பகிரங்கமாக வெளிப்படுத்தினார். பேட்டியின்போது இதுதொடர்பாக நரேந்திர மோடி கூறியதாவது:-

மராட்டிய போராட்டம், ஜாட் போராட்டம், குஜ்ஜார் போராட்டம், பட்டிதார் போராட்டம்… இந்த போராட்டங்கள் தடந்துகொண்டே இருக்கின்றன. இந்த போராட்டங்களைப் போன்று நமது நாட்டில் ஏராளமான போராட்டங்கள் தொடர்ந்து நடந்தன. வெளிநாட்டு நிதியில் நமது நாட்டில் ஏராளமான என்.ஜி.ஓக்கள் இயங்குகின்றன. அவர்கள் வெளிநாடுகளின் கைக்கூலிகளாக செயல்படுகின்றனர்.

இவர்கள்தான், இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு போராட்டத்திற்கும் பின்னால் இருந்து இயக்குகின்றனர். அவர்களின் நோக்கம் இந்தியாவில் அமைதி நிலவகூடாது என்பதுதான்.

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close