செய்திகள்

இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார் பிரதமர் நரேந்திர மோடி!!

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், நடுநிலை தவறி ஒருதலை பட்சடமாக செய்திகளை வெளியிட்டுவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளின் முகத்திரையை கிழித்தெறிந்தார். பேட்டியின்போது இதுதொடர்பாக நரேந்திர மோடி கூறியதாவது:-

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் ஆகிய மாநிலங்களில் ஆகிய மாநிலங்களில் ஆட்சி மாற்றம் நடந்தது. காங்கிரஸ் கட்சியினர் திருந்தி இருப்பார்கள் என்று மக்கள் நம்பினார்கள். ஆனால் நடந்தது என்ன? ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே காங்கிரசார் ஊழல் செய்யதொடங்கிவிட்டனர். அது அவர்களின் பழக்கம். மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த புதிய ஊழல்கள் இந்தியா முழுவதும் வைரலாக பரவியது.

ஆனால் காங்கிரஸ் கட்சியின் இந்த புதிய ஊழல்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளுக்கு ஊழலாக தெரியவில்லையா? ஏன் இதுபற்றி செய்திகள் வெளியிடவில்லை?

புலனாய்வு பத்திரிகைகளில் இந்தியன் எக்ஸ்பிரஸ் புகழ்பெற்றது. அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கற்பழிப்பு, கொலைகளை ஆராய்வதில் அதிக முக்கியத்தும் கொடுப்பீர்கள். அதுதொடர்பான தகவல்களை சேகரித்து வெளியிடுவீர்கள். நான் இந்தியன் எக்ஸ்பிசின் இத்தகைய புலனாய்வு செய்திகளை மிக கவனமாக படித்துவருகிறேன்.  

ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபிறகு அந்த மாநிலத்திலுள்ள ஆல்வார் என்ற இடத்தில் நடந்த மிகக் கோரமான கற்பழிப்பு சம்பவத்தில் எந்த புலனாய்வையும் இந்தியன் எக்ஸ்பிரஸ் மேற்கொள்ளவில்லையே ஏன்? அங்கு தற்போது பாரதிய ஜனதா ஆட்சி இல்லை என்பதால் அந்த செய்தி உங்களுக்கு தெரியாமலேயே போய்விட்டதா?

இதுபோல பேச்சு சுதந்திரத்தை காப்பதற்காக போராடுவதில் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை எப்போதுமே முதிலிடம் வகிக்கும். ஆனால், ”மோடி, மோடி” என்று கோஷம் போட்டத்தற்காக அப்பாவி இளைஞர்கள் மீது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு வழக்குப்பதிவு செய்ததே? அது உங்களின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் முதல்பக்கத்தில் வரவில்லையே, அது ஏன்?

விவசாய கடன் தள்ளுபடி, வேலையில்லா இளைஞர்களுக்கு நிதியுதவி என்றெல்லாம் தேர்தல் வாக்குறுதிகளில் காங்கிரஸ் அறிவித்தது. ஆனால் அதுபற்றி காங்கிரஸ் தலைவர்கள் கவலைப்படவில்லை. மாறாக சொத்து  சேர்ப்பதிலேயே குறியாக உள்ளனர். இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா? தெரியாதா?

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close