2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

மேற்கு வங்காளத்தில் மம்தாவின் கோட்டை வீழ்கிறது! தோல்வி பீதியால் அமித்ஷாவுக்கு அனுமதி மறுப்பு! மம்தாவின் பேயாட்டத்தின் உச்சம்!!

மேற்குவங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜியின் காட்டாச்சி நடக்கிறது. இந்த ஆட்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு மரண அடி கொடுக்க முடிசெய்தனர். இந்த மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. 6 கட்ட தேர்தல்கள் முடிந்துவிட்டன. 7 – வது இறுதிகட்ட தேர்தல் வருகிற மே-19 ஆம் தேதி நடக்கிறது.

இதுவரை நடந்த 6 – கட்ட தேர்தல்களிலும் மம்தாவின் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராகவே பெரும்பாலான மக்கள், தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு கட்ட தேர்தல்களிலும் மம்தாவின் குண்டர்கள், பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தி வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம், மம்தாவுக்கு எதிரான மனநிலையில் இருந்த மக்கள், பாஜக பக்கம் சாய்ந்தனர். இதை மம்தாவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

இதனை கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே மம்தா உணர்ந்துள்ளார். இதனால்தால் அவர் தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே, பாஜக தலைவர் அமித்ஷா, உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஆகியோரை மேற்கு வங்காளத்தினுள் நுழையவிடாமல் தடுத்தார். தன் முதலமைச்சர் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஆட்டம் போட்டார்.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள இந்த நேரத்திலும் அரசு நிர்வாகத்தில் உள்ள தனது ஆதரவு காவல்துறை அதிகாரிகளை பயன்படுத்தி, பாஜக தொண்டர்கள் மீது பொய் வழக்கு போடுவது, ஓட்டுப்பதிவின்போது தனது குண்டர் படை மூலம் பாஜக வேட்பாளர்கள் மீதும், தொண்டர்கள் மீதும் தாக்குதல் நடத்துவது போன்ற அடவாடிகளை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறார்.

இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தா மாவட்டத்திலுள்ள ஜாதவ்பூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரசார பேரணி நடத்த பாஜக தலைவர் அமிஷா திட்டமிட்டிருந்தார். மம்தா முதன்முதலில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த தொகுதியில் இருந்துதான். அவர், 1984 – ஆண்டு ஜாதவ்பூர் தொகுதியில் முன்னார் பாராளுமன்ற சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை தோற்கடித்தார். சிங்கத்தின் குகையில் சென்று அதனை எதிர்கொள்வதுதானே அமித்ஷாவிற்கு வழக்கம். ஜாதவ்பூருக்கு அமித்ஷா வருவதை அறிந்ததும், மம்தா ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டார்.

ஜாதவ்பூரில் அமித்ஷா பேரணி நடத்தினால் இறுதிகட்ட தேர்தல் நடக்க உள்ள தலைநகர் கொல்கத்தாவில் உள்ள 6 தொகுதிகளும் பாஜக வசம் சென்றுவிடும். இதனால் பீதியடைந்த மம்தா, அரசு நிர்வாகத்தில் உள்ள தனது எடுபிடி அதிகாரிகள் மூலம் அமித்ஷாவை தடுக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்,

அமித்ஷாவின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவரது ஹெலிகாப்டர் தரை இறங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்காளத்தை பொறுத்தவரையில், நகர்புற மக்களின் ஆதரவு, படித்த மக்களின் ஆதரவு, நடுத்தர மக்கள் மற்றும் மேல்தட்டு மக்களின் ஆதரவு, மலைப் பகுதி மக்களின் ஆதரவு இவை பெருவாரியாக பாஜகவுக்கு கிடைத்துள்ளது. குடிசைப் பகுதி ஏழை மக்களில் ஒரு பகுதியினர்தான் மம்தாவுக்கு ஆதரவாக உள்ளர்.

இதுதவிர மம்தாவை வீழ்த்துவதற்காக, இதுவரை கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு வாக்களித்த மக்களும் இந்த முறை பாஜக பக்கம் அணிவகுத்து உள்ளர். மம்தாவின் காட்டாச்சியை பாஜகவால்தான் வீட்டுக்கு அனுப்ப முடியும் என்று அவர்கள் நம்புகின்றர். இதை கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மேற்கு வங்காள முன்னாள் முதலமைச்சர் புத்தாதேவ் பட்டாச்சர்யாவும், திரிபுராவின் முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்காரும் உறுதி செய்துள்ளர். அவர்கள் தங்களின் அதிர்ப்தியையும், இயலாமையும் வெளிப்படுத்தி உள்ளனர்.

இதை, மம்தா சற்றும் எதிர்ப்பாக்கவில்லை. கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களின் இந்த மாற்றத்தை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்?

எனவே மேற்கு வங்காள மக்கள், யார் வரவேண்டும் என்பதைவிட மம்தாவை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளனர். அது பாஜகவால் மட்டுமே முடியும் என்பதையும் தங்களின் வாக்குகள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.

மே – 23 தேதி, மேற்கு வாங்காள மக்களின் விடியலுக்கான நாள் மட்டுமல்ல, மீண்டும் நரேந்திர மோடி பிரதமராக வெற்றிபெறும் மகிழ்ச்சித் திருநாளாகவும் அமையும்!

Tags
Show More
Back to top button
Close
Close