செய்திகள்

காஷ்மீர் பயங்கராவத்தை ஒழிக்க…370 யை நீக்கியே தீருவோம்–அமிட்ஷா!!

ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாஹ் , காஷ்மீருக்கு தனி பிரதமர் இருக்க வேண்டும் என்று அடிக்கடி மேடைகளில் பேசி வருகிறார். இந்திலையில் காஷ்மீர் பிரசனைகளுக்கு பாகிஸ்தானின் தலைவர்கள் குரல் கொடுத்து வருகிறார்கள்,இதன் அர்த்தம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது..

சமீபத்தில் வெளிவந்த காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் கூட, தேச துரோகம் தொடர்பான சட்டத்தை திருத்துவதாக அறிவித்துள்ளது. 2 நாட்கள் முன்பு கூட isis இயக்கம் இந்தியாவின் ஒரு பகுதியை சொந்தம் கொண்டாடியது.

இது அனைத்திற்கும் காரணம் காஷ்மீருக்கு இருக்கும் சிறப்பு அந்தஸ்து, ஆகையால் பாஜக ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக காஷ்மீருக்கு இருக்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்படும் என பாஜக தலைவர் அமிட்ஷா கூறியுள்ளார்.

மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது ,பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய வீரர்கள் 5 பேரின் தலையை வெட்டி கொடூரத்தை அரங்கேற்றிய போது , எந்தவித பதிலடியும் கொடுக்கப்படவில்லை என்று கூறிய அமிட்ஷா, மோடி ஆட்சியில் எந்த தாக்குதலாக இருந்தாலும் உடனே பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிடடார்

Tags
Show More
Back to top button
Close
Close