இந்தியா

ஏவுகணை வீழ்த்திய செயற்கைக்கோளின் துகள்கள் உதிர்ந்துவிட்டன – அமெரிக்க விஞ்ஞானிகள் அச்சத்தை போக்கிய இந்தியாவின் அறிவிப்பு..!

ஏவுகணையால் வீழ்த்தப்பட்ட செயற்கைக்கோளின் துகள்கள் கரைந்து உதிர்ந்துவிட்டன.இதனால் விண்வெளி ஆய்வுக்கு தீங்கு இல்லை என்று இந்திய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) ஏசாட் ஏவுகணை மூலம் வீழ்த்திய செயற்கைக் கோளின் சிதறிய துகள்கள் அச்சுறுத்தலாக கருதப்பட்ட நிலையில், அவை பெரும்பாலும் கரைந்து உதிர்ந்துப் போய் விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய விஞ்ஞானிகள் நடத்திய மிகப்பெரிய சாதனையாக கடந்த மார்ச் 27ம் தேதி விண்ணில் உளவு செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் அழித்தனர். ஆனால் அழிக்கப்பட்ட அந்த செயற்கைக் கோளின் துகள்கள் விண்ஆய்வாளர்களுக்கும் விண்வெளி ஆய்வகத்திற்கும் பெரும் தீங்கு விளைவிக்கும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்தனர்.

இந்தப் பிரச்சனையை கருத்தில் கொண்டு தான் 1000 கிலோமீட்டர் தூரத்தில் ஏவுகணையை செலுத்தி செயற்கைக் கோளை அழிக்காமல் அதனை 500 கிலோ மீட்டர் தூரத்தில் வைத்து அழித்ததாக இந்திய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்தனர்.

தற்போது அந்த துகள்கள் யாவும் உதிர்ந்து விட்டதாகவும் மிகச் சொற்ப அளவிலேயே அவை விண்ணில் இருப்பதாகவும் இதனால் விண் வெளி ஆய்வுக்கும் அதன் சொத்துகளுக்கும் எந்த வித சேதமும் இல்லை என்றும் இந்திய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close