தமிழ் நாடு

ஓட்டு வேண்டும் என்றால் எப்படி வேண்டுமானாலும் பேசலாமா..? தயவு செய்து நாட்டை துண்டாக்காதீர்கள் – கமலுக்கு ஷாக் கொடுத்த பிரபல நடிகர்..!

அரவக்குறிச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், பள்ளப்பட்டியில் நேற்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர் சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், முஸ்லிம்கள் அதிகம் இருக்கும் இடம் என்பதால் இதனைச் சொல்லவில்லை.

காந்தியார் சிலைக்கு முன்பு நின்று கொண்டு இதனைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே என தெரிவித்தார். கமல்ஹாசனின் இந்த கருத்துக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கமல்ஹாசனின் நேற்றைய அரவக்குறிச்சி பேச்சுக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இது குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள இந்தி நடிகர் விவேக் ஓபராய், அன்புள்ள கமல் நீங்கள் ஒரு சிறந்த கலைஞன். கலைக்கு எப்படி மதம் கிடையாதோ அதேபோல் தீவிரவாதத்துக்கும் மதம் கிடையாது.

கோட்சே தீவிரவாதி என நீங்கள் கூறி இருக்கலாம். ஏன் இந்து என குறிப்பிட்டு கூறினீர்கள். நீங்கள் வாக்கு கேட்கும் இடத்தில் இஸ்லாமிய வாக்காளர்கள் அதிகம் என்பதாலா? நாம் அனைவரும் ஒன்றே. தயவுசெய்து நாட்டை துண்டாக்காதீர்கள் என தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close