2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகரிப்பு ! சாதுர்யமாக காய்களை நகர்த்தும் எடியூரப்பா !!

கர்நாடகாவில் தார்வாடின் குந்த்கோல் தொகுதி மற்றும் லபுரகியின் சிஞ்சோலி சட்டசபை தொகுதிகளுக்கு 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

சமீபத்தில் நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலின் போது ம.ஜ.த. மற்றும் காங். கட்சியினரிடையே சலசலப்பு எழுந்தது. கூட்டணி தர்மத்தின்படி செயல்படவில்லை என்ற பரஸ்பர புகாரால் இரு கட்சி தலைவர்களிடையே புகைச்சல் அதிகரித்து வருகிறது.அமைச்சர் பதவி கிடைக்காத காங்கிரஸ் அதிருப்தியாளர்கள் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் திரைமறைவில் ஈடுபட்டுள்ளனர்.இதை சாதகமாக பயன்படுத்தி ஆட்சியை பிடிக்க 104 எம்.எல்.ஏ.க்களுடன் தனி பெரும் கட்சியாக திகழும் பா.ஜ.க வியூகம் வகுத்து வருகிறது.

இந்த இரண்டு தொகுதி வெற்றி தான் மாநில அரசியலை மாற்ற போவதாக கர்நாடகா அரசியல் வட்டராத்தில் நம்பப்படுகிறது. இதனால் காங்கிரஸ் பா.ஜ.க கட்சிகளின்முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் ம.ஜ.த. மற்றும் காங். கூட்டணி மக்கள் மத்தியில் நல்ல பெயர் வாங்கவில்லை. இரு தரப்பும் கோஷ்டியை வளர்த்துக் கொண்டு முதல்வர் குமாரசாமியை அச்சுறுத்தி காரியங்களை சாதித்து வருகின்றன. இதனால் சகல துறைகளிலும் முன்னெப்போதுமில்லாத நிலையில் ஊழல் பெருக்கெடுத்துள்ளது.

 மக்கள் முகம் சுளிக்கத் தொடங்கியுள்ளனர். இதையடுத்து இரு கட்சிகளிலுள்ள அதிருப்தி எம்எல்ஏ க்கள் பலர் இப்போதே பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளதாக பேசப்படுகிறது. அவர்கள் வரும் 23 ந்தேதி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததும் அதற்கேற்ப அதிரடி முடிவெடுக்கவுள்ளனர் என தெரிவதாகவும், டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இங்கும் ஆட்சி உறுதி எனவும் பேசப்படுகிறது. 

அதனால்தான் காங்கிரஸ்காரர்களின் மனநிலையை புரிந்து கொண்ட குமாரசாமி தற்போது சீத்தாராமையாவை நம்பாமல் நேரடியாக ராகுல் காந்தியுடன் பேசிவருவதாகவும் கூறப்படுகிறது. சீத்தாராமையாவுக்கு எதிராக சிவக்குமார் உள்ளிட்ட சில தலைவர்கள் அணிவகுத்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது. சிவக்குமார் மீது பல முறைகேடு வழக்குகள் உள்ள நிலையில் அவர் தன்னை காப்பாற்றிக்கொள்ள எந்த முடிவையும் எடுக்கக் கூடும் என தெரிகிறது.  இந்த நிலையில் பாஜக தலைவர் எடியூரப்பா வியூகங்கள் வகுத்து சாதுர்யமாக கைகளை நகர்த்திவருவதாக கூறப்படுகிறது. 

Tags
Show More
Back to top button
Close
Close