அரசியல்செய்திகள்

காங்கிரஸ், சிறுபான்மையினருக்கான கட்சி என்றால், காங்கிரஸ் தலைவராக ஒரு முஸ்லீம் ஏன் வரமுடியவில்லை? – பிரதமர் நரேந்திர மோடி கேள்வி!!

பிரதமர் நரேந்திர மோடி, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இஸ்லாமியர்கள் பா.ஜ.க. ஆட்சிக்காலத்தில் பய உணர்வுடன் இருப்பதாக சொல்வதெல்லாம், ஓட்டுக்காக உண்மையை மறைத்து கீழ்த்தரமாக அரசியல் நடத்துபவர்கள் கூறும் கட்டுக்கதை. சிறுபான்மையினருக்கு தாங்கள்தான் பாதுகாவலர்கள் போல ஊரை ஏமாற்றிவரும் காங்கிரஸ் கட்சி, ஏன் தலைமைப்பதவிகளைசிறுபான்மையின மக்களுக்கு வழங்குவதில்லை?.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்திதானே முடிசூட்ட முடிந்தது. அந்தப் பதவியை ஏன் ஒரு முஸ்லிம்வகிக்க முடியவில்லை? அவர் ஏன் அதை செய்யவில்லை?

மக்கள் ஜனாதிபதி அப்துல் கலாமை 2-வது முறையும் ஜனாதிபதி ஆக்க நாங்கள் முயற்சி செய்தோம். அவரிடம்என்ன தவறு இருந்தது? அவரை ஏன் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. அவருக்கு இன்னொரு முறை வாய்ப்புகொடுக்க நாங்கள் முயன்றபோது, காங்கிரஸ் ஏன் முட்டுக்கட்டை போட்டது?

இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close