2019 தேர்தல்அரசியல்செய்திகள்

முடிந்தால் கைது செய் – நாளை வரை இங்கு தான் இருப்பேன்… மம்தாவை கதறவிடும் அமித்ஷா!!

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி காரில் செல்லும்போது பா.ஜ.க வினர் “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிட்டனர். அப்போது கோபத்தில் காரிலிருந்து இறங்கிய மம்தா , உங்களை கைது செய்வேன் என்ற தொனியில் மிரட்டினார் .இச்சம்பவத்தை அடுத்து “ஜெய் ஸ்ரீராம்” என்ற முழக்கத்தை வைத்து பா.ஜனதா பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

மேற்கு வங்காளத்தில் பிரசாரம் செய்த போது பிரதமர் மோடி, நான் இங்கு “ஜெய் ஸ்ரீராம்” என முழக்கமிடுகிறேன், என்னை கைது செய்யட்டும் என மம்தா பானர்ஜிக்கு சவால் விடுத்தார். இப்போது அமித்ஷாவும் இதுபோன்ற சவாலை விடுத்துள்ளார்.

ஜாய்நகர் நாடாளுமன்ற தொகுதியில் பிரசாரம் செய்யும் போது, “யாராவது ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டால் மம்தா பானர்ஜிக்கு கோபம் வருகிறது. இப்போது இங்கு நான் ஜெய் ஸ்ரீராம் என சொல்கிறேன். உங்களுக்கு (மம்தா பானர்ஜி) தைரியம் இருந்தால், என்னை கைது செய்யுங்கள். நாளை வரையில் கொல்கத்தாவில்தான் இருப்பேன்” என கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close