இந்தியா

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு பணியிட மாறுதல்..? எங்கு சென்றாலும் பெருகும் ஆதரவு – முத்திரை பதித்த வீரதீரத்தின் உச்சம்..!

இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான் ராஜஸ்தான் மாநிலம், சுரத்கர் விமானப்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய போது பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி இந்தியா திரும்பிய விங் கமாண்டர் அபிநந்தன். இவர், பாதுகாப்பு காரணமாக ஸ்ரீநகர் விமானப்படை தளத்திலிருந்து மேற்குபகுதி விமானப்படை தளத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு மாற்றப்பட்டார்.

இந்நிலையில், தற்போது அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் சுரத்கர் விமானப்படை தளத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாகவும் கடந்த சனிக்கிழமையன்று அவர் அங்கு தனது பணியை தொடங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பே அபிநந்தன், ராஜஸ்தான் மாநிலத்தில், பிகானீர் விமானப்படை தளத்தில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அபிநந்தனை அங்குள்ள படைவீரர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். பலர் போட்டிபோட்டு அவருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags
Show More
Back to top button
Close
Close