சிறப்பு கட்டுரைகள்செய்திகள்

அம்மா என்றழைக்காத உயிரில்லையே… அம்மாவை வணங்காது உயர்வில்லையே…

இவ்வுலகில் நாம் எந்த ஒரு காலக் கட்டத்திலும் சரி எத்தனை மனிதர்களைச் சந்தித்து இருந்தாலும் நம் தாய் போல் ஆகிடுமா என்ற எண்ணம் நமக்குள் தோன்றும்.

நம்மிடம் திரும்பி எந்த ஒரு கைமாறையும் எதிர்பார்க்காமல் வாழ்நாள் வரை நம் மீது அக்கறையும் பாசத்தையும் காட்டுவது நம் தாய் தான்.

நாம் தாயிடம் சாப்பிட்டியா அம்மா என்று கேட்டால் போதும் அதை விட தாயிற்கு மகிழ்ச்சி அளிப்பது வேறு எதுவாகவும் இருக்க முடியாது.

அனைத்து பெற்றோர்களிடம் கேட்டாலும் அவர்கள் கூறுவது குழந்தைகளைப் பெற்றெடுப்பதை விடக் கடினமானது அவர்களை நல்ல மனிதர்களாக வளர்ப்பது தான் என்று.

தாயின் வளர்ப்பு தான்குழந்தைகளின் வாழ்க்கை அதை பாடலாகவும்வந்துள்ளது.

‘‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே
அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே’‘
வளர்ப்பு என்பதில் கூடத் தந்தையின் வளர்ப்பை அவர்கள் குறிப்பிடவில்லை. தாயின் வளர்ப்பையே குறிக்கிறார்கள்.

குழந்தை எவ்வாறான மனிதன் ஆகப் போகின்றான் என்பதையே தாய் தான் தீர்மானிக்க வேண்டும்.
புரிதலும் தாயிடம் தான் அதிகமாக நடைபெறுகின்றது.

தன் மகன் அல்லது மகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தாயால் புரிந்து கொள்ள முடியும். அதேபோல நமக்குப் பிடித்தவை பிடிக்காதவை உடம்பிற்குத் தீங்கு விளைவிப்பவை என அனைத்தையும் தாய் அறிவாள்.
நம்மைப் பாதுகாக்க வேண்டும் என்றே தாய் முதலில் நினைப்பாள்.

மழை வந்துவிட்டால் வாசலில் துண்டுடன் நின்று திட்டிக்கொண்டே தலையை துவட்டி விடுவது போன்ற பாசம் எங்கும் கிடைக்காது..வீட்டிற்கு வர நேரமாகிவிட்டால் நண்பர்கள் வீடு விளையாடும் இடம் என்று தேடி சென்று என் மகனை பார்த்தீர்களா எனும் விசாரிப்பது பதட்டம் அடையும் தருணம்.தாயிடம் மட்டுமே உண்டு’
அந்த பாசத்தை மிஞ்ச இந்த உலகில் வேறொன்றும் இல்லை

நமக்கு அடிபடும் பொழுது நம்மைவிட வலியால் அதிகம் துடிக்கும் ஒரே நபரும் நம் தாயாகத் தான் இருக்க முடியும்.

வாழ்க்கையில் எந்த ஒரு நிலை வந்தாலும் எந்த ஒரு சூழலிலும் நம் பெற்றோர்கள் இல்லையென்றால் இன்று நாம் இல்லை. அவர்கள் தான் நமக்கு உயிர் அளித்த தெய்வங்கள். அவர்களை நாம் என்றுமே மறக்கவோ உதாசினப் படுத்திவிடவோ கூடாது. ‘‘

அம்மா என்ற வார்த்தை களங்கம் இல்லாதது, கபடம் இல்லாதது, பாசமும், அன்பும் ததும்பியது, என்றும் உயிர்ப்புடன், உலகமே அவளாக, சுமைகளை சுமந்து குடும்பத்தின் முகவரியாக வாழ்பவள்.

அம்மா என்ற வார்த்தைக்குள்தான் அத்தனை உயிரும், சுகமும் அடங்கியுள்ளது. உலகமே அம்மா என்ற வார்த்தைக்கு அடிமை. அம்மாவுக்கு இணை இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

‘‘இவ்வுலகை பொறுத்தவரை நீ எனக்குத் தாய் ஆனால் என்னைப் பொறுத்தவரை நீ தான் என் உலகமே” அன்னையர் தின வாழ்த்துக்கள்

Tags
Show More
Back to top button
Close
Close