செய்திகள்

மோடி ஆட்சியில் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் ஒப்பாரி வைக்கவில்லையே ஏன்? – மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கேள்வி!!

ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தலின்போதும் விலைவாசி உயர்வு ஒரு முக்கிய பிரச்சினையாக பேசப்படும். ஆனால் இந்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் விலைவாசி உயர்ந்துவிட்டது என்று வாய்திறக்க வில்லை. காரணம் கடந்த 5 ஆண்டுகளாக விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளது நரேந்திர மோடி அரசு.

இதற்கு ஒரு முக்கிய காரணம் ஜி.எஸ்.டி.யை நடைமுறைபடுத்தியது. இதன் மூலம் பதுக்கல், கள்ளச்சந்தை அடியோடு ஒழிக்கப்பட்டது. உணவு தானியங்களை பதுக்க முடியாததால், விலைவாசி உயரவில்லை. மக்களும் சிரமம் இன்றி உள்ளனர்.

இதுகுறித்து மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங், பீகாரில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பேசியபோது கூறியதாவது: –

இதனால்தான் நரேந்திர மோடி ஆட்சியில் விலைவாசிகள் உயர்ந்துவிட்டது என்று எதிர்கட்சிகள் ஒப்பாரி வைக்கவில்லையே ஏன்?

நரேந்திர மோடி அரசின் சிறந்த நிதி நிர்வாகம், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், ஜி.எஸ்.டி. அமலாக்கம் போன்றவைகளால்தான் விலைவாசி கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறது. விலைவாசி உயராதது மட்டுமல்ல,பணவீக்கமும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

சுதந்திரத்திற்குப்பின், தேர்தலின்போது விலைவாசி பிரச்சினை எதிரொலிக்காதது இது 2–வது முறையாகும். இதற்கு முன் கடந்த 2004–ம் ஆண்டு அப்போதைய வாஜ்பாய் அரசு விலைவாசியை கட்டுக்குள் வைத்திருந்தது. அதன்பிறகு நரேந்திர மோடி விலைவாசியை கட்டுக்குள் வைத்துள்ளது.

இவ்வாறு மததிய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close