செய்திகள்

பீகாரில் 4 லட்சம் ஒப்பந்த ஆசிரியர்களை நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையாக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

பீகாரில் அரசுப்பள்ளிகளில் ஒப்பந்த ஆசிரியர்களாக  4 இலட்சம் பேர் சில ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர்.  இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும், நிரந்தர ஆசிரியர்களுக்குரிய ஊதியம் தரப்படவேண்டும் எனக் கோரியும் போராட்டம் செய்து வருகின்றனர்.
பீகார் மாநில உயர்நீதிமன்றத்திலும் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து வழக்கு தொடர்ந்தனர்.  கடந்த  2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31 ந்தேதி  இந்த வழக்கு விசாரணை எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது ஒரே பணியை இருவர் செய்யும்போது பாரபட்சமின்றி ஒரே மாதிரியான ஊதியம், வழங்கப்படவேண்டும் என்று  தீர்ப்பு அளித்தது.
பீகார் அரசு இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அதை இன்று விசாரித்த நீதிபதிகள் அபை மனோகர் சாப்ரே மற்றும் லலித் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் பீகார் மாநில அரசின் நிலைப்பாடு சரியானது என்றும், ஒப்பந்த ஆசிரியர்களுக்கான வரன்முறைகள் எதுவும் மீறப்படவில்லை என்றும், நிரந்தர பணியாளர்களுக்கு சமமாக ஒப்பந்த பணியாளர்களை கருத முடியாது என்றும் எனவே சமமான ஊதியம் அளிக்க வாய்ப்பில்லை என்றும் கூறியது. 

Tags
Show More
Back to top button
Close
Close