2019 தேர்தல்அரசியல்இந்தியா

பயத்தில் வயநாட்டுக்கு ஓடினார் ராகுல்! போட்டியிடாமலேயே ஓட்டம்பிடித்தார் பிரியங்கா! – ஸ்மிருதி இரானி விளாசல்

உத்தரபிரதேச மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த மததிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 5 ஆண்டுகளாக வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று தலைமறைவாகிவிடுவார். எந்த நாட்டில் இருக்கிறார்? எப்போது திரும்புவார்? எந்தவிவரமும் காங்கிரஸ்காரர்களுக்கே தெரியாது. தேர்தல் நேரத்தில் மட்டும்5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தலையை காட்டுவார். இங்கு வந்து பூணூல் அணிந்துகொண்டு, கங்கைக்கு சென்று ஆரத்திஎடுத்து வழிபாடு நடத்துவார். 

போருக்கு பயந்து அமேதியில் இருந்து ஓட்டம்பிடித்து வயநாடு சென்று பதுங்கிக்கொண்டவர்தானே இவர். சொந்தகட்சியினர் கேட்டுக்கொண்டும், பயத்தில் வாராணசி மற்றும் அமேதி தொகுதிகளை புறக்கணித்துவிட்டு, ராகுல் வயநாடுசென்று பதுங்கிக்கொண்டார்.

இவர்  இப்படி என்றால், இவரது தங்கை பிரியங்கா வதேரா, ஒருபடி மேல். பயத்தில் அவர் தேர்தலில் போட்டியிடவேமறுத்துவிட்டார். அவர் வாக்கு வங்கிக்காக மட்டுமே அயோத்தி செல்வார். ஆனால் ராமருக்கு தலைவணங்கி வழிபாடுநடத்த மாட்டார். 

இவ்வாறு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி விளாசினார்.

Tags
Show More
Back to top button
Close
Close