செய்திகள்

நரேந்திர மோடி ரூ.80 லட்சம் செலவில் தன்னை அழகுபடுத்தினார் என்று காங்கிரஸ் பரப்பிய பித்தலாட்ட வீடியோ அம்பலம்!!

பிரதமர் நரேந்திர மோடி தினமும் தன்னை ஒப்பனை செய்வதற்காக 80 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார் என்று காங்கிரஸ்காரர்கள் ஒரு பித்தலாட்ட செய்தியை வெளியிட்டனர். அவர் ஒப்பனை செய்யும் வீடியோ என்று ஒரு வீடியோவையும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டனர். காங்கிரசின் அதிகாரபூர்வ முகநூல் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்து பகிர்ந்தனர். ஊழல் செய்வதிலும், கொள்ளை அடிப்பதிலும் கைதேர்ந்த காங்கிரஸ் கும்பலுலுக்கு இது ஒன்றும் புதிது அல்ல.

இந்த வீடியோ குறித்த விவரத்திற்கான பகுதியில், “தகவல் அறியும் உரிமை சட்டம் வழியாக பெற்ற தகவல்களில், பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்பனை செலவுகளுக்காக மாதந்தோறும் சராசரியாக 80 லட்ச ரூபாய்வழங்கப்பட்டுள்ளது” என்றும் குறிப்பிட்டு மோசடி செய்தனர்.

இது அப்பட்டமான காங்கிரசின் பித்தலாட்டம் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2016 – ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 – ஆம் தேதி லண்டன் மேடம் தசவுட்ஸ் அருங்காட்சியகத்தில் நரேந்திர மோடியின் மெழுகு சிலை வைக்கப்பட்டது. இதற்காக, 2016 – ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேடம் தசவுட்ஸ்அருங்காட்சியகத்தை சேர்ந்த குழுவினர் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு  சிலையின் மாதிரிக்கு, அளவுகள்மற்றும் பிற விவரங்களை எடுப்பதனர்.  அப்போது அதை வீடியோவாக பதிவு செய்தனர்.

இது அப்போது செய்தியாகவும், வீடியோவாகவும் வெளியானது. அந்த வீடியோவை எடுத்து காங்கிரஸ் களவாணி கும்பல் மீண்டும் நாட்டை கொள்ளையடிக்க வழிதேடியுள்ளது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

இப்படிப்பட்ட காங்கிரஸ் கையில் மீண்டும் நாடு கிடைத்தால் என்ன ஆகும் என்பதுதான் இப்போது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close