செய்திகள்

கிரண்பேடிக்கு ஆதரவாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு! ஊழல் நாராயணசாமிக்கு மீண்டும் சிக்கல்!

புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பதவி ஏற்றது முதல் அங்கு காங்கிரஸ் அரசின் ஊழல் செய்வதற்கான கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன.

இதனால் ஊழலில் ஊறிப்போன முதலமைச்சர் நாராயணசாமி பொங்கி எழுந்தார். கிரண்பேடிக்கு எதிராக பல போராட்டங்களை நடத்திப் பார்த்தார். ஆனால் எந்த பயனும் இல்லை. காரணம் புதுச்சேரி மக்கள் கிரண்பேடி பின்னால் அணி திரண்டனர்.

இதனால் அன்றாட அரசின் பணியில் கிரண்பேடி தலையிடுகிறார் என்றுகூறி நாராயணசாமியின் கைத்தடியான லட்சுமிநாராயணன் மூலம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் முதலமைச்சர் நாராயணசாமி. இந்த வழக்கை விசாரித்த சென்ளை உயர்நீதிமன்றம், கிரண்பேடிக்கு தடைவிதித்தது.


இதனைத் தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி மேல்முறையீடு செய்வதற்கு அரசு பணத்தை வழங்க மாட்டோம் என்றுமுதலமைச்சர் நாராயணசாமி வீராவசனம் பேசித் திரிந்தார்.


இந்த நிலையில், ஊழலை ஒழிப்பது மற்றும் நேர்மையானஅரசு நிர்வாகம் செயல்படுவதற்காக பாடுபட்டுவரும் கிரண்பேடிக்கு ஆதரவாக நரேந்திர மோடி அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்தது.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம்,காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணனுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இதனால் முதலமைச்சர் நாராயணசாமி ஊழல் கனவில் மீண்டும் மண்விழுந்து உள்ளது. அதேநேரம் புதுச்சேரி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close