இந்தியாசெய்திகள்

மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தானுக்கு இதுவரை வழங்கிய தண்ணீர் நிறுத்தம் : தீவிரவாதிகளை தொடர்ந்து ஆதரிப்பதால் மோடி அரசு அதிரடி!

இந்தியா பாகிஸ்தான் இடையே 1960 – ஆம் ஆண்டு மனிதாபிமான அடிப்படையில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் போடப்பட்டது.இதன்படி ஜீலம், செனாப், சிந்து ஆகிய 3 நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு நீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்தியாவில் உற்பத்தியாகி பாகிஸ்தான் வழியாக பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் மேற்கண்ட 3 நதிகளின் 80 சதவீதம்தண்ணீரை பாகிஸ்தான் பயன்படுத்தி வருகிறது.

காஷ்மீர் மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கும், பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களுக்கும் இந்த 3 நதிகளின் தண்ணீரை திருப்பி பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தும், இதுவரை அதுபோன்ற நடவடிக்கையில் இந்தியா ஈடுபடவில்லை. இந்த நதிநீரை தடுத்து நிறுத்தினால் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்டும் என்ற மனிதாபிமான அடிப்படையில் இந்த நதிகளின் நீர் வழங்கப்பட்டுவந்தது.

ஆனால் இதையெல்லாம் கொஞ்சம்கூட நினைத்துப்பார்க்காமல், தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்து அவர்களை இந்தியாவிற்குள் அனுப்பி குண்டு வைப்பதையே காலம் காலமாக பாகிஸ்தான் செய்து வருகிறது.

நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரவு பதவியேற்ற பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனால் காங்கிரஸ் ஆட்சியில் இந்தியா முழுவதும் குண்டு வைத்த பாகிஸ்தான் தீவிரவாதிகள், காஷ்மீர் மாநிலத்திற்கு வெளியே தலைகாட்டமுடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் அவர்களின் நடவடிக்கைகள், காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சில மாவட்டங்களுங்குள் சுருங்கின.

நரேந்திர மோடி அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான தொடர் நடவடிக்கை மேற்கொண்டபோதிலும், தீவிரவாதிகளுக்கு பயிற்சியளித்து அவர்களை காஷ்மீருக்குள் அனுப்பும் பணியை பாகிஸ்தான் தொடரத்தான் செய்கிறது. இதன் காரணமாக உரி தாக்குதல், புல்வாமா தாக்குதல்கள் அரங்கேறின.

இதற்குப் பதிலடியாக நரேந்திரமோடி அரசு, பாகிஸ்தான் நாட்டிற்குள் புகுந்து தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக்களை நடத்தியது.

இருந்தாலும் பாகிஸ்தானின் நிலையில் பெரிய மாற்றம் நிகழவில்லை. அந்த நாடு தொடந்து தீவிரவாதிகளை உற்பத்தி செய்யும் பணிகளை செவ்வனே செய்து வருகிறது.

இதனால்  பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி  செய்யும் பொருட்களின் வரியை நரேந்திர மோடி அரசு 200 சதவீதமாக உயர்த்தியது. அதோடு நிற்காமல் உலக நாடுகள் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும்  முயற்சியிலும் நரேந்திர மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டது. அதற்கு கைமேல் பலனும் கிடைத்தது.

பாகிஸ்தானின் செல்லப்பிள்ளையாக அந்நாட்டு ராணுவ பாதுகாப்பில் ஆடம்பரமாக வாழ்ந்து வரும் லஷ்கர் இ தொய்பா தீவிராத இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவித்தது ஐக்கிய நாடுகளின் சபை. பாகிஸ்தானுக்கு வக்காலத்து வாங்கிவரும் சீனாவின் எதிர்ப்பை மீறி இது நடந்துள்ளது. இது உலக அரங்கில் மோடி அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி ஆகும்.

இவையெல்லாம் நடந்தாலும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஒரு துரும்பைக்கூட எடுத்துப்போட முற்படவில்லை. இன்னமும் தீவிரவாதிகளுடன் கொஞ்சி குலாவிதான் வருகிறது. தீவிரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவச்செய்வதையும் நிறுத்தவில்லை.

எனவே நரேந்திரமோடி அரசு  அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி உள்ளது. பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டு வரும் 3நதிகளின் நீரையும் புதிய அணை மூலம் யமுனை ஆற்றில் இணைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ராவி ஆற்றின்குறுக்கே ஷாக்பூர்-கான்ட் அணை கட்டுவதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.

இதனால், பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டுவரும் தண்ணீர் நிறுத்தப்பட்டு அந்த நதிகளின் நீர் அரியான, பஞ்சாப் மற்றும்ராஜஸ்தான் மாநிலங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது.

இந்த தகவல்களை மத்திய கப்பல் மற்றும் சாலை  போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரிஉறுதிபடுததினார்.

Tags
Show More
Back to top button
Close
Close