தமிழ் நாடு

நீட் தேர்வை வைத்து ஒப்பாரி வைத்த திமுகவிற்கு பதிலடி – இந்த முறை கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே தமிழக அரசின் புதிய பாடத்திட்டத்தில்…? மறைக்கப்பட்ட உண்மைகள்..!

நீட் தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துமே தமிழ்நாடு புதிய பாடத்திட்டத்தில் cover ஆகி இருந்தன.

ஒரு காலகட்டத்தில் ஐஐடி கல்லூரியில் சேர வேண்டுமானால் cbse பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் மட்டுமே சேரமுடியும் என்ற நிலை இருந்தது ஆனால் தற்போதைய அரசு cbse பாடத்திட்டத்திற்கு இணையாக பாடங்களை நமது மாணவர்களுக்கு வகுத்துக் கொடுத்து இருக்கிறார்கள்.

இந்த முயற்சி கட்சி சார்பற்று பாராட்டப்பட வேண்டிய விஷயம் நீட் ஆகட்டும் ஐஐடி என்று ஆகட்டும் இனி வரும் காலங்களில் நமது தமிழக மாணவர்கள்  நுழைவுத்தேர்வு எழுதி நிறைய இடங்களைப் பெற்று அருமையான வல்லுநர்களாகவும் மருத்துவர்களாகவும வர இருக்கிறார்கள்.

சிபிஎஸ்இ பாடத்திட்டம் மட்டுமே அகில இந்திய தேர்வுகளுக்கு ஏற்றதாக அமையும் என்ற கருத்து இங்கே காலம் காலமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு இணையாக தமிழக பாடத்திட்டமும் உயர்ந்துள்ளது என்பது சிலிர்ப்பான உண்மை.

நீட் தேர்வை வைத்து ஒப்பாரி வைத்து, மக்கள் மத்தியில் பிரிவினை கருத்துக்களை தூண்டி, அழிவு சிந்தனைகளை வளர்த்த எதிர்கட்சிகள் ஒருபுறம். அவர்களுக்கான கச்சிதமான ஊதுகுழலாக ஊடகங்கள் மறுபுறம். இத்தகைய சூழலில் நேர்மறையாக சிந்தித்து செயல்படுவதற்கு மக்கள் மீது உண்மையான அக்கறையும் அசாத்தியமான உளத்துணிவும் வேண்டும். இரண்டையுமே அதிமுக அரசு வெளிப்படுத்தியுள்ளது.

இதற்காக கல்வி அமைச்சர் செங்கோட்டையனை எவ்வளவு தூரம் பாராட்டினாலும் தகும். இத்தகைய அரசுகளை தொடர்ந்து ஆதரிப்பது தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து சிறிதேனும் அக்கறை கொண்ட பெற்றோரின் கடமை.

Tags
Show More
Back to top button
Close
Close