செய்திகள்

தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: குற்றச்சாட்டை நிராகரித்து கோர்ட் உத்தரவு !!

சமீபத்தில் சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர், தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். இதனை மூத்த நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் அமர்வு கூடி, பாப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைத்திருந்தது.

பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாக அமைக்கப்பட்ட மூன்று உச்சநீதிமன்ற நீதிபதிகளின் விசாரணைக் குழுவின் முன்பு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய் ஆஜராகி விளக்கம் அளித் தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தமக்கு இக்குழுவால் நீதி கிடைக்கும் என நம்பிக்கையில்லை என்று கூறி திடீரென பின்வாங்கினார்.

ஆயினும் விசாரணையைத் தொடர நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதனால் மூவர் குழு முன்பு ஆஜரான ரஞ்சன் கோகய் தன் மீதான பாலியல் புகார்கள் போலியானவை என்று விளக்கம் அளித்தார். நீதித்துறையை மிரட்ட சதித்திட்டம் தீட்டப்படுவதாகவும் ரஞ்சன் கோகய் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் இன்று நீதபதி பாப்டே தலைமையிலான குழு, தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close