செய்திகள்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வைக்கப்போகும் ஆப்பு! அபிநந்தனை சிறை பிடித்த நாளை கொண்டாட பாகிஸ்தான் திட்டம் !

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த நாளை, ஆண்டு தோறும் கொண்டாட, பாகிஸ்தான் விமானப்படை திட்டமிட்டுள்ளது.அவ்வாறு கொண்டாடினால் மிகவும் பழைய விமானத்தை வைத்து அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எப்16 விமானத்தை அபிநந்தன் சுட்டு வீழ்த்தினார். இந்த விஷயமும் பெரிதாக பேசப்படும்

இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை சிறைப்பிடித்த நாளை, ஆண்டு தோறும் கொண்டாட, பாகிஸ்தான் விமானப்படை திட்டமிட்டுள்ளது.

பிப்ரவரி 14ல், பாகிஸ்தானை சேர்ந்த, ஜெய்ஷ் – இ – முகமது என்ற பயங்கரவாத அமைப்பின் தற்கொலைப் படையினர், ஜம்மு – காஷ்மீரின், புல்வாமா பகுதியில், இந்திய ராணுவ வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த, 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக, பிப்., 26ல், இந்திய விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானின் பாலகோடு பகுதியில், ஜெய்ஷ் – இ – முகமது பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த கூடாரங்கள் மீது குண்டுகளை வீசினர். அதில், 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

தைத் தொடர்ந்து, பிப்ரவரி , 27, பாகிஸ்தான் ., விமானங்கள், இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தன. இந்திய விமானப் படையினர் பதிலடி தந்து, பாக்., விமானங்களை விரட்டினர். அந்த முயற்சியில், நம்முடைய, ‘மிக் 21’ ரக விமானம், அமெரிக்காவின் சக்தி வாய்ந்த எப்16 விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு பாக்.,ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் விழுந்தது. அதன் விமானி அபிநந்தன், பாக்., ராணுவத்திடம் பிடிபட்டார். பின், மார்ச், 1ல், அவர் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்தியப் படை மீது, பதில் தாக்குதல் நடத்தியதையும், இந்திய வீரர் சிறை பிடிக்கப்பட்டதையும், ஆண்டுதோறும் பிப்., 27ம் தேதி, ‘ஆப்பரேஷன் ஸ்விப்ட் ரிடார்ட்’ என்ற பெயரில் கொண்டாட, பாக்., விமானப்படை திட்டமிட்டுள்ளது.

தன் நாட்டு வீரர்களிடையே, இதை அறிவித்த, பாக்., விமானப்படை தளபதி, முஜாஹித் அன்வர் கான், தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இவர்கள் கொண்டாடினால் அமெரிக்காவின் சவாலை சந்திக்க பாகிஸ்தான் தயாராக இருக்க வேண்டும்…

Tags
Show More
Back to top button
Close
Close