செய்திகள்

ராகுல்காந்திக்கு செமடோஸ் விட்ட சுப்ரீம் கோர்ட்: மோடி குறித்து பொய் பேசியதற்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என உத்தரவு !

பிரதமரை அவதூறாக பேசிய விவகாரம்: வருத்தம் தெரிவித்தால் போதாது, நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்!! பிரதமர் மோடியை அவதூறாக பேசிய விவகாரத்தில், ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி சோக்கிதார் அல்ல, சோர்.. அதாவது திருடன் என்று உச்சநீதிமன்றமே தெரிவித்துவிட்டதாக, அதன் அறிக்கை ஒன்றை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசியிருந்தார். இதையடுத்து, அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், தாம் அவ்வாறு பேசியதற்கு வருத்தம் தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்தார். 
ஆனால், ராகுலின் பதில் திருப்தி அளிப்பதாக இல்லை என்று உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. வருத்தம் தெரிவித்ததற்கு பதிலாக, ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதையடுத்து, ராகுலின் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ராகுலின் சார்பில் மன்னிப்பு கோரினார். விரிவாக பதில் மனு தாக்கல் செய்வதாகவும் சிங்வி தெரிவித்துள்ளார். இதையடுத்து, வழக்கு மே 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags
Show More
Back to top button
Close
Close