சினிமாதமிழ் நாடு

உங்களுக்கு என்ன தெரியும் எங்கள் பண்பாட்டை பற்றி..? கள்ளழகரை விமர்சித்தவருக்கு நடிகர் மாதவன் கொடுத்த சரியான பதிலடி..!

நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் டிவிட்டரில் மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆம்புலன்ஸ்க்கு வழிவிட்ட வீடியோவை பதிவிட்டுந்தார். இதை குறிப்பிட்டு மாதவன் இந்தியா ஒளிர்கிறது என கூறியிருந்தார்.

பலரையும் கவர்ந்த இந்த வீடியோவை ஒருவர் இதில் என்ன பெருமை இருக்கிறது. இதுபோன்ற ஏற்பாடுகளை செய்பவர்கள் எப்போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுமே என சிந்திப்பதில்லை என கூறியிருந்தார்.

தற்போது மாதவன் அதற்கு இந்த வீடியோவில் உள்ள நல்ல விஷயத்தையும் பொதுமக்களின் பெருந்தன்மையையும் நேர்மறையான எண்ணத்தில் பாருங்கள். எதிர்மறையாக எதையும் அணுகாதீர்கள். பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்பே செய்யப்பட்டிருந்தாலும் நெருக்கடியான சூழலில் மக்கள் அதை எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது தான் அழகு என கூறியுள்ளார்.

அதே போல மற்றொரு நபர் மக்களின் வாழ்வியலை கருத்தில் கொள்ளாமல் இது மாதிரியான பண்பாடுகள் 1959 ல் இருந்து நடைபெற்று வருகிறது. இதை நீங்கள் பாராட்டுவீர்களா என கேலி செய்துள்ளார்.

இதற்கு மாதவன் எங்கள் மக்களின் பெருமையையும், வீடியோவில் உள்ள நல்ல விசயத்தையும் வெளிநாட்டில் வாழும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது. உங்களுக்கு விளக்கம் சொன்னாலும் எந்த பயனும் இல்லை. மடத்தனம். சீக்கிரம் நலமாகுங்கள் என பதிலடு கொடுத்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close