இந்தியா

காலபைரவரின் ஆசியோடு வேட்பு மனு தாக்கல் செய்தார் பிரதமர் மோடி..!

கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், உத்திரப்பிரதேசத்தின் வாரணாசியிலும் போட்டியிட்டார் மோடி. இரண்டு தொகுதியிலும் அவர் வெற்றி பெற்ற நிலையில், வதோதரா தொகுதி எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இன்று வரை வாரணாசியின் எம்.பியாக இருக்கிறார்.

மூன்றாம் கட்டமாக குஜ்ராத்தில் 23ம் தேதி 26 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மோடி குஜராத்தில் போட்டியிடுவார் என்று தொண்டர்கள் நினைத்தனர். ஆனால் அவர் அங்கு எந்த தொகுதியிலும் போட்டியிடவில்லை. வாரணாசி தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறார்.

இந்நிலையில் வாரணாசி தொகுதியில் தனது வேட்புமனுவை சற்று முன்னர் தாக்கல் செய்தார் பிரதமர் மோடி . அவரின் வேட்புமனு தாக்கலின் போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் உடனிருந்தனர். காலை காலபைரவர் கோவிலுக்கு சென்று பூஜை செய்த பின்னர் அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Tags
Show More
Back to top button
Close
Close