செய்திகள்

ரூ. 613.84 கோடி செலவில் துணை ராணுவ படையினருக்கு அதி நவீன பாதுகாப்பு வாகனங்கள், குண்டு துளைக்காத சட்டைகள்!

பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்ணி வெடிகளிலிருந்து பாதுகாக்க, துணை ராணுவ படையினருக்கு, புதிய வாகனங்களை கொள்முதல் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இது பற்றி, ராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ள, ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தில் பணியாற்றும், எல்லை பாதுகாப்பு படையினருக்கும், நக்சல்களால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியில் பணியாற்றும், துணை ராணுவ படையினருக்கும், புதிய வாகனங்கள் வாங்க, 613.84 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இந்த நிதியில், கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனங்கள், குண்டு துளைக்காத சட்டைகள், ஆம்புலன்ஸ்கள் ஆகியவை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கண்ணி வெடியிலிருந்து பாதுகாக்கும் வாகனத்தில், ஒரே நேரத்தில், ஆறு பேர் பயணம் செய்யலாம்.

அதேபோல், என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய கமாண்டோ படையினருக்கு, ‘ரிமோட்’ மூலம் இயக்கப்படும் வாகனங்கள் வாங்க, 16.84 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் மூலம், கட்டடத்துக்குள்ளும், பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்த முடியும். மேலும், வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடித்து, அதை அழிக்க, கமாண்டோ படையினருக்கு, இந்த வாகனம் மிகவும் உதவியாக இருக்கும். மாடி அல்லது சரிவு பாதையில், இந்த வாகனங்கள் பயணிக்க முடியும். இந்த வாகனத்தில், ‘எக்ஸ்ரே’ உட்பட பல நவீன வசதிகள் செய்யப்பட்டிருக்கும். இவ்வாறு கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close