இந்தியா

தினமும் 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி – நடிகர் அக்சய் குமார் வெளிக்கொண்டு வந்த இரகசியம்..!

பிரதமர் நரேந்திர மோடியிடம், பாலிவுட் நட்சத்திரம் அக்ஷய் குமார் நடத்திய உரையாடல் இன்று காலை 9 மணிக்கு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அரசியல், தேர்தல் தொடர்பு அல்லாத அக்ஷயகுமாரின் பல கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதில் அளித்துள்ளார்.

தினமும் சற்று அதிகமான நேரத்தை தூங்குவதற்கு ஒதுக்க வேண்டும் என்று தம்மிடம் முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா கேட்டுக் கொண்டதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ராணுவத்தில் சேருவதே என் கனவு; பிரதமராக வருவேன் என நினைத்ததில்லை’ என்றார்.

மூன்று மணி நேரம் மட்டுமே உறங்குவதாக கூறிய மோடியிடம் நடிகர் அக்ஷய் குமார் பேட்டியெடுத்த போது மோடி இவ்வாறு கூறினார்.

அரசியல் தவிர்த்து மோடியின் தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பம், எண்ணங்கள், ரசனை குறித்து பேட்டியெடுக்கப் போவதாக அக்சய் குமார் தமது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். அடுத்த ஆறு மணி நேரங்களில் அவர் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேட்டியெடுத்தார்.

எந்த கேள்விக்கும் சளைக்கமாமல் மனம் விட்டு பேசிய மோடி, தமக்கு மாம்பழங்கள் பிடிக்குமா என்பது குறித்தும் உண்மையில் தாம் குஜராத்தி தானா, பிரச்சாரத்தின் தீவிரத்திற்கு இடையில் வாய்விட்டு சிரிப்பதுண்டா என்பது குறித்தும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close