தமிழ் நாடு

பயத்தில் கேரளாவிற்கு தலைதெறிக்க ஓடிய தி.மு.க பிரமுகர் – சொந்த தம்பியையே கொன்ற வழக்கில் நடந்த திடீர் திருப்பம்..?

தூத்துக்குடி மட்டக்கடை சின்னக்கடை தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவருடைய மகன் பில்லா ஜெகன் (வயது 45). இவருக்கு பிரபா என்ற மனைவியும், 2 மகள்கள், 3 மகன்களும் உள்ளனர். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளராகவும், விஜய் ரசிகர் மன்ற மாவட்ட தலைவராகவும் உள்ளார். இவர் தனது தம்பிகள் சுமன், சிமன்சன் (32) ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்கள் லாரி வைத்து தொழில் செய்து வந்தனர்.

நேற்று முன்தினம் பில்லா ஜெகனும், அவரது தம்பி சிமன்சனும் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் சிமன்சனின் மனைவி தரண்யா கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். பின்னர் சிமன்சன், தரண்யாவை அழைத்து வர மணப்பாடு சென்றனர். ஆனால், அவர் வீட்டிற்கு வர மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து வீடு திரும்பிய சிமன்சன் தனது நண்பர்களுடன் வீட்டில் பேசிக்கொண்டு இருந்தார். நள்ளிரவு 12 மணிக்கு பில்லா ஜெகன் வீட்டுக்கு வந்தார். அப்போது, ‘தனக்கு சேர வேண்டிய சொத்துகளை பிரித்து கொடு, நான் தனியாக வாழ்ந்து கொள்கிறேன்’ என்று பில்லா ஜெகனிடம், சிமன்சன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பில்லா ஜெகன் தான் வைத்து இருந்த கைத்துப்பாக்கியால் சிமன்சனை சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சிமன்சன் கீழே விழுந்தார். உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த சிமன்சனை அங்கிருந்த அவரது நண்பர்கள் தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த பயங்கர கொலை குறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அவரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே காரில் சென்று கொண்டு இருந்த பில்லா ஜெகன் மற்றும் அவருடைய நண்பர்களை கேரள போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இதைத்தொடர்ந்து அவரை தூத்துக்குடிக்கு கொண்டு வருவதற்காக தமிழக போலீசார் திருவனந்தபுரத்துக்கு விரைந்து உள்ளனர். சொத்துத்தகராறில் தம்பியை சுட்டுக்கொன்ற தி.மு.க. பிரமுகர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close