செய்திகள்தமிழ் நாடு

அது வேற வாய் – இது நாரவாய்! கடந்த வருடம் IPL-க்கு எதிராக வடை சுட்ட போலி போராளி GV ப்ரகாஷ், வெட்கமின்றி மைதானத்திற்கு சென்றது மட்டுமின்றி தம்பட்டப்பதிவு!

கடந்த வருடம் IPL போட்டிகள் சென்னையில் நடக்கக் கூடாது என்று நாடி நரம்பு புடைக்க ஊழையிட்டு வந்தார் திரைப்பட நடிகரும் போலி போராளியுமான GV ப்ரகாஷ். ஆனால், அதே வேளையில் தான் இவர் நடித்து flop ஆகிய நாச்சியார் எனும் தமிழ் திரைப்படம் வெளியாகி திரையில் ஓடிக்கொண்டிருந்தது. இரண்டுமே கேளிக்கை எனும் பட்சத்தில் தன் திரைப்படம் மட்டும் திரையில் ஓட வேண்டும் ஆனால் IPL போட்டிகள் நடக்கக் கூடாது என சுயநல காரணத்திற்காக பொதுநல வேடம் போட்டு வந்தார்.

இந்த இரட்டை நிலைப்பாட்டை கேள்விக் கேட்ட அனைவரையும் ட்விட்டரில் ப்ளாக் செய்து ஓடி ஒளிந்த GV ப்ரகாஷ் இந்த வருடம் தனது நண்பர்களுடன் சென்னையில் IPL போட்டியை கண்டு ரசித்தது மட்டுமின்றி, அந்த புகைப்படங்களை சிறிதும் வெட்கம், மானம், சூடு சுரணையின்றி சமூக வலைதளங்களில் பதிந்து வருகிறார்.

இந்த இரட்டை நிலைப்பாட்டை கண்டித்து இளைஞர்கள் அவரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்த முறையும் பதிலா சொல்லப் போகிறார் இந்த போலிப் போராளி? ஓடி தான் ஒளிவார்!

Tags
Show More
Back to top button
Close
Close