செய்திகள்

இரானிலிருந்து எண்ணெயை வாங்காதே !! அமெரிக்காவின் தடைக்கு இந்தியா சவால்!

கடந்த 2017ல், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த டிரம்ப், 2018, மே மாதம், ஈரான் மீது, மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டு வந்தார்.

அத்துடன், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், நவ., 4க்குள், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, நிறுத்த வேண்டும் என்றார். ஆனால் இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை. எனினும், கச்சா எண்ணெய் இறக்குமதியை, ஆண்டுக்கு, 2.26 கோடி டன்னில் இருந்து, 1.50 கோடி டன்னாக குறைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஆனால், தன் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காத, டிரம்ப், இந்தியா, சீனா உள்ளிட்ட எட்டு நாடுகளுக்கு மட்டும், ஆறு மாதங்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய, சிறப்பு திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கினார். இந்த சலுகைக் காலம், மே 2ல் முடிவடைவதால், அடுத்து எந்த நாடும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என, நேற்று முன்தினம் அமெரிக்கா அறிவித்தது. இதனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.

இது குறித்து, மத்திய வெளிவிவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர், ரவீஷ் குமார் கூறியதாவது: ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த, அமெரிக்காவின் முடிவால் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சந்திக்க, இந்தியா தயாராக உள்ளது. இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா உட்பட, அனைத்து நாடுகளுடனும் கலந்து பேசி சுமுக தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close