செய்திகள்

இலங்கை குண்டு வெடிப்பில் மனித குண்டாக செயல்பட்டவர்கள் கொழும்பு வர்த்தகரின் 2 கோடீஸ்வர மகன்கள் !!! பிரபல ஆங்கில பத்திரிக்கை தகவல்!

இலங்கையில் கடந்த ஈஸ்டர் பெருநாளன்று 8 இடங்களில் தொடர் மனித குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 321 பேர் பலியானார்கள். 500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உலகம் முழுவதையும் இந்த சம்பவம் அதிர்ச்சி அடையச்செய்தது.

இந்த சம்பவம் தொடர்பாக  22 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய குடும்பங்களை சேர்ந்த வாலிபர்கள் பிடிக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பேற்பதாக உலகளாவிய இசுலாமிய பயங்கரவாத இயக்கமான ஐ.எஸ் பொறுப்பேற்றுள்ளது.

 இந்த இயக்கத்தால் மத ரீதியாக மூளை சலவை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்தவர்களால்தான் இந்த துயரமான சம்பவம் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும்  8 இடங்களில் நடத்தப்பட்ட இந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் முக்கியமானது சின்னமான் கிரேன்ட் ஹோட்டல் மற்றும் ஷன்கிரி லா ஹோட்டல். இந்த இடங்களில் நடைபெற்ற தாக்குதலில் மனித வெடிகுண்டாக செயல்பட்டவர்கள் கொழும்பு நகரை சேர்ந்த பிரபல வாசனைப் பொருள்கள் ஏற்றுமதி செய்து வரும் கோடீஸ்வர வர்த்தரின் புதல்வர்களான சாகரன் ஹுசேன் மற்றும் அபி மொகம்மது என தெரிய வந்துள்ளது.

மேலும் அனைத்து வெடுகுண்டு சம்பவங்களிலும் தற்கொலை குண்டுகளாக செயல்பட்டவர்கள் யாரும் ஏழை முஸ்லிம்களல்ல. பலர் வசதியான குடும்பங்களை சேர்ந்தவர்கள் என்றும், வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களால் மூளை சலவை செய்யப்பட்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேற்கண்ட 2 சகோதரர்களும் ஒரே குடும்பத்தில் வசித்துவந்தவர்கள் என்றும், இவர்கள்தான் நேஷனல் தவ்ஹீத் ஜமாத்தின் முக்கிய பிரமுகர்களாக செயல்பட்டுவந்தவர்கள் என்பதும் புலனாய்வு அமைப்புகள் மூலம்  தெரியவந்துள்ளதாகஒ op india ஆங்கிலப்பத்திரிக்கையில் செய்தி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் உள்ளூர் கம்யூனிஸ்டுகள் வறுமையாலும், அடிப்படை கல்வி கிடைக்காததாலும் தான் சில ஏழை முஸ்லிம் குடும்பங்களை சேர்ந்த இளைஞர்கள் மூளை சலவை செய்யப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறார்கள் என கூறிவருகின்றனர்.

ஆனால் இலங்கை சம்பவத்தில் பணக்கார வாலிபர்களே இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரியவந்ததால் தீவிர மதவெறியே இந்த சம்பவங்களுக்கு காரணமெனவும், கம்யூனிஸ்டுகள் அரைவேக்காட்டுத்தனமாக உளறி வருவதாகவும் மேற்கண்ட பத்திரிகை கூறுகிறது. 

Tags
Show More
Back to top button
Close
Close