தமிழ் நாடு

பகுத்தறிவு என்ற பெயரில் மக்களின் மதநம்பிக்கையின் மீது அராஜகம் : இந்து கடவுளை இழிவுபடுத்தி பேசிய வீரமணி மீது வழக்கு.!

இந்து கடவுள் கிருஷ்ணரை இழிவுபடுத்தி பேசிய வழக்கில், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் காவல்துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

இது தொடர்பாக கி.வீரமணியை கைது செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி அசோக் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய குற்றப்பிரிவு காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கி.வீரமணியின் பேச்சு அடங்கிய வீடியோ யூ டியூப்பில் இருந்து நீக்கப்பட்டு விட்டதாகவும், தற்போது வீரமணியை விசாரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், விசாரணைக்கு ஆஜராகாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close