விளையாட்டு

ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்த்த தமிழக பெண் கோமதி – படைக்கப்பட்ட அசாத்திய சாதனை..!

ஆசிய தடகள விளையாட்டுப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த கோமதி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்திய வீராங்கனை கோமதி 2 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

திருச்சி மணிகண்டம் பகுதியைச் சேர்ந்த கோமதி, தேசிய அளவிலான தடகளப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற பெடரேஷன் கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

Tags
Show More
Back to top button
Close
Close