செய்திகள்

இலங்கை வெடிகுண்டு சம்பவம் எதிரொலி: தூத்துக்குடி கடல் பகுதிகளில் இரவு, பகலாக தீவிர கண்காணிப்பு!

இலங்கையில் ஈஸ்டர் திருநாளன்று அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்பு தாக்குதலில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 500க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடியில் கடலோர பாதுகாப்பு படையினர் இன்று 3வது நாளாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தீவிரவாத அமைப்புகள் கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் வாண் தீவு, காசு வாரி தீவு, பாண்டியன் தீவு, ஆகிய தீவுகளில் அன்னிய படகுகள் ஊடுருவல் உள்ளதா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Tags
Show More
Back to top button
Close
Close