செய்திகள்

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு பணியாளர் நலச் சங்கம் ஆதரவு !! பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு எதிராக கண்டனம்!

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் முடிவதற்கு முன்பாக ரபேல் வழக்கு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் மீது தீர்ப்பளிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் நேர்மையாக தீர்ப்பளித்தால் அது பாஜகவுக்கு சாதகமாக சென்றுவிடும் என நம்பும் அரசியல் சக்திகள் சில மறைமுகமாக செய்யும் சதியே தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு என கூறப்படுகிறது.
அவர் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறிய பெண் மற்றும் அவரின் கணவன் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் எனவும் அவர்களைக் கொண்டு ஒரு கும்பல் சதி செய்ய முயல்வதாகவும் பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ளது. இந்த பெண்ணின் புகாருக்கு எதிராக அனைத்து வக்கீல்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.  

 இந்த நிலையில், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்க்கு, உச்ச நீதிமன்ற பணியாளர் நலச் சங்கம், ஆதரவு தெரிவித்துள்ளது. அவர் மீது, பொய்யான, ஜோடிக்கப்பட்ட புகார் கூறப்பட்டுள்ளதற்கு, கண்டனம் தெரிவித்து, சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close