2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

காங்கிரஸ் ஆட்சியில் இடைத்தரகர்களால் வெங்காயம் விலை கிலோ ₹100 வரை விற்றது: இப்போது ₹100-க்கு 5 கிலோ வரை கிடைக்கிறது !! பிரதமர் மோடி பெருமிதம்!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாசிக் மாவட்டத்திற்குட்பட்ட பிம்பல்கலின் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது தொண்டர்களிடம் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது; இந்தியாவிற்கு அருகிலிருக்கும் இலங்கையில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். 2014ம் ஆண்டுக்கு முன், இந்தியாவில் டெல்லி, மும்பை, அயோத்தியா ஆகிய இடங்களில்  இது போன்ற சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. காங்கிரஸ்- தேசிய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் என்ன செய்தனர்? என அவர் கூறினார். 

இரங்கல் கூட்டங்களை தான் நடத்திக் கொண்டிருந்தனர். உலகம் முழுவதும் சென்று, பாகிஸ்தான் அதை செய்தது, இதை செய்தது என குறைக் கூறி அழுவதே அவர்கள் செயல். ஆனால், நாங்கள் என்ன செய்தோம்? பயங்கரவாதிகளை கோழைத்தனமாக கையாளும் காங்கிரஸின் அணுகுமுறையை மாற்றினோம்.

மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த 2 கட்ட தேர்தலில் பாஜகவிற்கு மக்கள் மத்தியில் கிடைத்த செல்வாக்கை நினைத்து எதிர்க்கட்சியினர் தூக்கமின்றி இருக்கின்றனர்.  எனது தலைமையிலான அரசு வெங்காயத்தின் உற்பத்தி உயர்த்தவும், அதற்கான போக்குவரத்துக்கான வரிகளை குறைக்கவும் பாடுபடுகிறது.  பயிர் விலைகளை மாற்றி  இடைத்தரகர்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தி தரும் வகையில்  காங்கிரஸ் செயல்பட்டது. அதனால் ஏழை மக்கள் கிலோ ரூபாய் 100 க்கு கூட வெங்காயம் வாங்கினர். ஆனால் எங்கள் ஆட்சியில் 100 ரூபாய்க்கு 5 கிலோவரை மக்களுக்கு கிடைத்து வருகிறது. அதே சமயம் வருமானத்தின் பெரும்பகுதி விவசாயிகளுக்கும் செல்கிறது. இடையில் சாப்பிடும் இடைத்தரகர்களுக்கு எதிராக நான் தொடர்ந்து போராடுவேன் என அவர் தெரிவித்தார். 

Tags
Show More
Back to top button
Close
Close