செய்திகள்

வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமலே முறைகேடாக வாக்களித்த நடிகர் சிவகார்த்திகேயன்!! தேர்தல் கமிஷன் நடவடிக்கை!

சென்னையில், கடந்த 18 ந் தேதியன்று அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் ஆர்வமாக வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில், வளசரவாக்கம் குட்ஷெப்பர்ட் பள்ளியில் வாக்களிக்க நடிகர் சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி வந்தார். அவர் வாக்களித்தார். ஆனால் வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் இல்லாததால், அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.

அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்று முன்தினம் அவர் தனது டுவிட்டர் மூலம் கோரிக்கை விட்டிருந்தார். தானும் வாக்களிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்தார். இந்த நிலையில், அவருடைய பெயர் பட்டியலில் இல்லாமல் வாக்களிக்கமுடியவில்லை என்பதால் மனமுடைந்த அவர் மற்றொரு வாக்குச்சாவடிக்கு சென்றாராம். அங்குள்ள தேர்தல் அதிகாரியை பார்த்துப் பேசி பட்டியலில் பெயர் இல்லாத நிலையிலும் முறைகேடாக அவர் வாக்களித்துவிட்டதாக புகார்கள் எழுந்தன.

இந்த நிலையில் பட்டியலில் பெயர் விடுபட்ட நிலையில் சாதாரண மக்களுக்கும் இதுபோன்ற சலுகைகளை தேர்தல் அதிகாரிகள் செய்வார்களா? என்றும் பிரபலமானவர்களுக்கு ஒரு சட்டம், சாதாரண குடிமக்களுக்கு ஒரு சட்டமா? என கேட்டு சமூக ஊடகங்களில் பலர் பதிவிட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த புகார் மாநில தேர்தல் கமிஷன் தலைமை அதிகாரி சத்ய பிரசாத் சாஹூ வரை சென்றுள்ளது. இது குறித்து இன்று பாலிமர் தொலைக்காட்சி உட்பட பல தொலைகாட்சிகளுக்கு பேட்டியளிக்கும் போது” பட்டியலில் பெயரில்லாத ஒருவருக்கு வாக்களிக்க அனுமதித்தது தப்புதான் என்றும் குறிப்பிட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சத்ய பிரசாத் சாஹூ கூறினார். மேலும் சிவகார்த்திகேயனின் வாக்கு கழித்துக் கொள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆராயப்படும் என்றும் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close