செய்திகள்

புத்த மதத்துக்கு மாறிய இந்துக்களுக்கு ‘ஷெட்யூல் பிரிவு’ சான்று கிடைக்குமா? வரும் 20 ம் தேதி மீண்டும் விசாரணை!

புத்த மதத்துக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. எனப்படும் ‘செட்யூல்டு காஸ்ட்’ என பிரிவினர் என்று சான்றிதழ் வழங்கும் 28 ஆண்டு சட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ராகுல் மஹோத் என்பவர் டில்லி உயர் நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தொடர்ந்துள்ளார். மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: புத்த மதத்துக்கு மாறியவர்களுக்கு எஸ்.சி. பிரிவினர் என்ற ஜாதி சான்றிதழ் அளிக்கும் வகையில் 1990ல் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது; இது மஹாராஷ்டிராவில் மட்டுமே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. 

டில்லி உட்பட நாட்டின் வேறு எந்த மாநிலத்திலும் இதைச் செயல்படுத்தவில்லை. இதனால் ஜாதிச்சான்றிதழ் கிடைக்காமல் புத்த மதத்துக்கு மாறியவர்கள் எந்தப் பலனையும் அனுபவிக்க முடியவில்லை.இந்த சட்டத்தை நாடு முழுவதும் அமல்படுத்த உத்தரவிடவேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்கும்படி மத்திய சமூக நீதித் துறை மற்றும் டில்லி அரசுக்கு ‘நோட்டீஸ்’ அனுப்ப டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வரும் ஆக. 20க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close