செய்திகள்

அபிநந்தன் பணியிட மாற்றம் ஏன்? அடுத்து எங்கே பணியேற்கிறார்? விமானப்படை தகவல்கள்!

ஸ்ரீ நகர் விமான தளத்திலிருந்து விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அத்துமீறி காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை, மிக்-21 வகை போர் விமானத்தில், விரட்டிச் சென்றபோது, பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டவர் விங் கமாண்டர் அபிநந்தன்.

சர்வதேச நாடுகளின் மூலமாக இந்தியா தந்த நெருக்கடி காரணமாக, அபிநந்தனை பாகிஸ்தான் விடுதலை செய்தது. இதையடுத்து அவருக்கு உடல் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் செய்யப்பட்டன. மீண்டும் அபிநந்தன் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அபினந்தனின் வீர செயலுக்காக இந்திய விமானப்படை அவருக்கு பரம வீர் சக்ரா விருதுக்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில், அவர் பழையபடி காஷ்மீரின், ஸ்ரீநகர் விமான தளத்தில் பணிக்கு அமர்த்தப்படுவார் என்று கூறப்பட்டது.
ஆனால், அபிநந்தனுக்கு காஷ்மீர் தளத்தில் பாதுகாப்பு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதும், விமானப்படை, அவரை மேற்கு மண்டலத்திற்கு பணிமாற்றம் செய்துள்ளது. அவர் பணியாற்றப்போகும் இடம் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

Tags
Show More
Back to top button
Close
Close