செய்திகள்தமிழ் நாடு

விஜயகாந்துக்கு மீண்டும் சிகிச்சை : அமெரிக்கா செல்கிறார்!

சிகிச்சைக்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வருகிறார்.  அவர் சில மாதங்களாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்றார்.  சிகிச்சையை முடித்துக்கொண்டு பிப்ரவரி மாதம் 16ம் தேதி சென்னை திரும்பினார்.

அதன் பிறகு அவர் வீட்டிலேயே ஓய்வெடுத்து வருகிறார். தற்போது நடைபெற்ற மக்களவை தேர்தல் மற்றும் தமிழகத்தின் 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஒரே ஒரு நாள் மட்டும் பிரசாரம் செய்தார். அப்போது ஓரிரு நிமிடங்கள் மட்டுமே பேசினார்.

அவரது உடல் நிலை சரியில்லாமல் உள்ளது. எனவே சிகிச்சைக்காக விஜயகாந்த் மீண்டும் அமெரிக்கா செல்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close