செய்திகள்

இலங்கையில் குண்டு வெடிப்பு: புலன் விசாரணைக்கு சர்வதேச போலீஸ் ஒத்துழைப்பை கோரும் ரணில் விக்கிரம சிங்கே!! பிரதமர் மோடியும் ஒத்துழைக்க உறுதி !

இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல்களில் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 400-க்கும் அதிகமானோர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதலுக்கு எந்தஒரு அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணையையும் அந்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள் மேற்கொள்கிறது. இந்நிலையில் குண்டு வெடிப்புகள் சம்பவம் தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் விஜயவர்தன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கைதானவர்கள் யார் என்பது குறித்த விவரங்களை போலீஸ் தரப்பு வெளியிடவில்லை. ஆனாலும் உருப்படியான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் வெடிகுண்டு சம்பவத்துக்கு முன்பே சில தகவல்கள் கிடைத்தும் அவற்றை தங்கள் கவனத்துக்கு கொண்டு வராதது ஏன் என உள்நாட்டு பாதுகாப்பு குறித்த ஏஜென்சிகள் மீது தனது அதிருப்தியை பிரதமர் ரணில்சிங்கே தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்” இந்த சம்பவத்துடன் சர்வதேச சதித்திட்டம் உள்ளனவா என்பது குறித்து ஆராய சர்வதேச  பொலீஸ் உதவி எமக்கு அவசியம். இது குறித்தும் நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். எமது புலனாய்வு பிரிவும் இதுகுறித்து ஆராய்ந்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர். அமைச்சர்களுடன் இது குறித்தும் பேசினேன். இந்திய பிரதமர் மோடியுடனும் பேசினேன் . அவரும் புலனாய்வு தொடர்பான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்துள்ளார் என்றார்.  

Tags
Show More
Back to top button
Close
Close