இந்தியாசெய்திகள்

மண்டியிட்ட ராகுல் காந்தி! பிரதமர் மோடியை திருடன் என கூறியதற்கு வருந்துகிறேன் என உச்ச நீதிமன்றத்தில் குமுறி பல்டி அடித்த காங்கிரஸ் தலைவர் ராகுல்!

ரபேல் விவகாரம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பத்திரிகைகளில் வெளியான ஆவணங்களை விசாரணைக்கு ஏற்கலாம் என கோர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உத்தரவிட்டது

“ரபேல் போர் விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் செய்யும் நடைமுறையில், எந்த மோசடியும் நடந்ததற்கான சந்தேகம் எழவில்லை” என, முதலில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் கூறப்பட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி, மூத்த வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்தனர்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு விசாரித்தது. “திருடப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் எந்த முடிவையும் நீதிமன்றம் எடுக்கக் கூடாது” என மத்திய அரசு வாதிட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட் இதனை நிராகரித்து விட்டது.

மீடியாக்களில் வெளியான ஆவணங்கள் ஆய்வு செய்ய எடுத்து கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து ராகுல், “பிரதமர் மோடியை கோர்ட்டே காவலாளியான மோடியை திருடன் என்று கூறி விட்டது” என்று தெரிவித்தார். இதற்கு பா.ஜ.க தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கோர்ட் உத்தரவில் நீதீபதிகள் பிரதமர் மோடி குறித்து ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை என்றும், ராகுலின் கருத்து கோர்ட் அவமதிப்பு என்றும் மத்திய அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 
இந்த மனுவில் ராகுலுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது. இந்த வழக்கில் ராகுல் சார்பில் அவரது வழக்கறிஞர் அபிடவிட் ஒன்றை தாக்கல் செய்தார். இதில் ராகுல் தரப்பில் வருத்தம் தெரிவிப்பதாகவும், பிரசாரத்தில் வார்த்தைகள் தவறாக வந்து விட்டது வ்ன்றும் இது துரதிருஷ்டமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags
Show More
Back to top button
Close
Close