செய்திகள்

இலங்கை தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் தமிழக அமைப்புகளுக்கு தொடர்பா..? திடுக்கிடும் தகவல்கள்.!

இலங்கை தலைநகர் கொழும்பு, நிகாம்போ, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இந்த சம்பவத்தில் 290-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அவர்களில் 35 பேர் வெளிநாட்டினர் என்று தெரிய வந்துள்ளது.

இதற்கிடையே, பலியான வெளிநாட்டினரில் 6 பேர் இந்தியர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்துள்ளது.கொழும்பு குண்டு வெடிப்புகளில் பலியானவர்களின் உடல்கள், கொழும்பில் உள்ள தேசிய ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த ஆஸ்பத்திரியில் இருந்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்துக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் தற்போது தமிழகத்தில் செயல்பட்டுவரும் தாவீத் ஜமாத் அமைப்பு இத்தாக்குதலுக்குக் காரணமாக இருக்குமோ என உளவுத்துறை சந்தேகிக்கிறது என்று டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. சிறிய பயங்கரவாத அமைப்பான தாவீத் ஜமாத் இதுபோன்ற தொடர் குண்டு வெடிப்பு நடத்துவது மிகப்பெரிய காரியமாக பார்க்கப்படுகிறது. இதுவரை இந்த குண்டு வெடிப்புக்கு எந்த பெரிய பயங்கரவாத அமைப்புகளும் பொறுப்பேற்காத நிலையில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

2016ம் ஆண்டில் டாகாவில் நடந்த ஹோலே ஆர்டிசான் பேக்கரி தற்கொலை தாக்குதலுல்போலவே இந்த தாக்குதல் அமைந்துள்ளது. அந்த தாக்குதலில் உள்ளூர் இளைஞர்கள் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு பயிற்சி பெற்று இருந்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் விடுதலைப் புலிகள் தற்கொலை தாக்குதல் நடத்தினர். அதற்குப் பின்னர் இதுபோன்ற பெரிய தாக்குதல் இலங்கையில் நடைபெற்றதில்லை. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக மீனவர்கள் நால்வர் தேவாலயங்கள் குண்டு வெடிப்புக்குப் பின்னர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags
Show More
Back to top button
Close
Close