செய்திகள்

குண்டுவெடிப்புக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்களே !! நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் !! நாளை நாடு முழுவதும் துக்க தினம்: இலங்கை அதிபர் அறிவிப்பு!

இலங்கையில் இன்று (ஏப்.22) நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார். ஈஸ்டர் திருநாளான நேற்று இலங்கையில் தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்தது. 290 பேர் பலியாகினர். 400 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கொண்டு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. கொழும்பு பஸ் நிலையத்தில் இன்று 87 டெட்டேனேட்டர்கள் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை கைப்பற்றி போலீசார் செயல் இழக்க செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக அமைச்சரவை செய்தி தொடர்பாளர் ரஜிதா செனரத்னே கூறுகையில்: உள்நாட்டில் உள்ள தேசிய தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உளவுத்துறை எச்சரித்தும் போதிய பாதுகாப்பு செய்யாதது அரசின் குறைபாடு. இந்த குண்டுவெடிப்பில் வெளிநாட்டு சதி இருக்கிறது. இந்த சதி இல்லாமல் இவ்வளவு பெரிய குண்டுவெடிப்பு நடத்த முடியாது என்றார்.

இது போல் அதிபர் மைத்ரிபால சிறிசேனா வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுகிறது. முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்படுகிறது.

நாட்டின் தற்போதைய நிலையில் முப்படை வீரர்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படுகிறது. நாளை (22 ம் தேதி ) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வாறு அதிபர் தெரிவித்துள்ளார்.
மேலும் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் இலங்கையை சேர்ந்தவர்களே என்றும் அவர் உள்ளூர் இஸ்லாமிய அமைப்பை சாடியிருக்கிறார்.

Tags
Show More
Back to top button
Close
Close