2019 தேர்தல்அரசியல்இந்தியா

பீகாரில் சிறுபான்மை வாக்குகளை சிதற அடித்து சவால் கொடுக்கும் பாஜக!! திணறும் மெகா கூட்டணி கட்சிகள்!

பீஹாரில் உள்ள, 40 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில், மதுபானி தொகுதியில், 10 ஆண்டுகளாக, பா.ஜ., – எம்.பி., சவுத்ரி ஹுகும்தியோ நாராயண் யாதவ் வெற்றி பெற்று வருகிறார். இந்த முறை, இவரது மகன், அசோக் யாதவ் போட்டியிடுகிறார். இவர், ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணியில், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார்.

எதிர் அணியில், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ், ‘விகாஷ்ஷில் இன்சான்’ கட்சி உள்ளிட்ட மெகா கூட்டணி அமைத்துள்ளன. இதன் சார்பில், இன்சான் கட்சி, பத்ரிநாத் பர்வே போட்டியிடுகிறார். இதற்கு, காங்கிரஸ் மற்றும் ஆர்.ஜே.டி.,யில் எதிர்ப்பு எழுந்துள்ளது. காங்கிரசின், முன்னாள், மத்திய அமைச்சர், ஷகில் அஹமது கட்சியில் இருந்து வெளியேறி, சுயேச்சையாக போட்டியிடுகிறார். ஆர்.ஜே.டி.,யின் முக்கிய தலைவரான அலி அஷ்ரப் பத்மி, அக்கட்சியில் இருந்து விலகி, சமாஜ்வாதி வேட்பாளராகியுள்ளார்.

இந்த இரண்டு வேட்பாளர்களும், முஸ்லிம்களின் ஓட்டுகளை பிரிக்க உள்ளனர். அதனால், பா.ஜ., மற்றும் ஐக்கிய ஜனதா தளத்துக்கு, வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது. மெகா கூட்டணிக்கு வர வேண்டிய, சிறுபான்மை ஓட்டுகள் மட்டும் பிரிந்தால் போதும் என, பா.ஜ., கணக்கு போட்டுள்ளது. இதை சமாளிக்க முடியாமல், மெகா கூட்டணியில் உள்ள கட்சிகள் திணறி வருகின்றன. 

இந்த தொகுதிமட்டுமல்லாமல் அநேக தொகுதிகளிலும் இதே நிலவரம்தான் என்றும் பீகாரில் அனைத்து தொகுதிகளையும் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ., கூட்டணி கைப்பற்றினாலும் அதிசயம் ஒன்றும் இல்லை என்றும் பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

source: dinamalar

Tags
Show More
Back to top button
Close
Close