இந்தியா

உலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் இந்தியாவில் உருவானது – பா.ஜ.க அரசின் சாதனையில் மற்றுமோர் மைல்கல்..!

இந்தியாவில் உள்ள ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால் நிலையங்கள், டிசிஎஸ் எனப்படும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் வழங்கிய புதிய சாப்ட்வேர் தொழில்நுட்பம் வாயிலாக நவீன மயமாக்கப்பட்டு இருக்கின்றன.

இதற்கான 1100 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, 2013 ஆம் ஆண்டு தபால் துறையிடம் இருந்து டிசிஎஸ் நிறுவனம் பெற்றது. தபால் நிலையங்களில் வாடிக்கையாளர்களுக்கு வங்கி, காப்பீடு போன்ற அதிக சேவைகளை திறம்பட அளிக்கும் விதத்தில் தகவல் தொழில்நுட்பங்கள் நவீனப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான திட்டமாகும்.

அதன்படி, மின்னஞ்சல் இயக்கம், நிதி மற்றும் கணக்கு, மனிதவள செயல்பாடு போன்றவற்றில் தீர்வு காணப்பட்டதுடன், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான தபால்நிலையங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இதனால் உலக அளவில் மிகப்பெரிய மின் தபால் நெட்வார்க் உருவாகி உள்ளது. இந்த தொழில்நுட்பம் 5 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு உறுதுணையாக இருப்பதுடன், நாளொன்றுக்கு 30 லட்சம் தபால் பரிமாற்றங்களை டிஜிட்டல் முறையில் அளிக்க முடியும்.

Tags
Show More
Back to top button
Close
Close