இந்தியாசெய்திகள்

‘ரபேல்’ விசாரணைக்கு வரும் நிலையில் தலைமை நீதிபதி மீது பாலியல் குற்றச்சாட்டு: புகார் கூறிய பெண் ஊழியர் மோசடி புகாரில் சிறை தண்டனை பெற்றவர் !

தற்போது பதவியில் உள்ள உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் முடிவதற்கு முன்பாக ரபேல் வழக்கு உட்பட பல முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் மீது தீர்ப்பளிக்கவுள்ளார். இந்த நிலையில் அவர் நேர்மையாக தீர்ப்பளித்து அது பாஜகவுக்கு சாதகமாக சென்றுவிடும் என நம்பும் அரசியல் சக்திகள் சில மறைமுகமாக செய்யும் சதியே தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு எனவும், குற்றச்சாட்டு கூறிய பெண் மற்றும் அவரின் கணவன் குற்றப் பின்னணி கொண்டவர்கள் எனவும், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் எனவும் அவர்களைக் கொண்டு ஒரு கும்பல் சதி செய்ய முயல்வதாகவும் பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டுள்ளது.    

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து  அனைத்து தரப்பினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதுதொடர்பாக, அனைத்து விதிமுறைகளை பின்பற்றி முழுமையான விசாரணை மேற்கொள்ளவும், இதற்கு பின்னணியில் மிகப்பெரிய சதி இருப்பதாகவும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

தலைமை நீதிபதி மீதான புகாருக்கு,பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீதித்துறைக்கு சதி நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, கடந்தாண்டு, அக்டோபரில் பதவியேற்றார், ரஞ்சன் கோகோய். இந்தாண்டு, நவ., 17ல் அவர் ஓய்வு பெறுகிறார்.

விசாரணை
கடந்தாண்டு ஜனவரியில், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, பல புகார்களை கூறி, நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அந்தநான்கு பேரில், ரஞ்சன் கோகோயும் ஒருவர்.இந்த நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது, உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர், பாலியல் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின், 22 நீதிபதிகள் வீடுகளுக்கு, அந்த பெண், புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, இணையதள ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.அதையடுத்து நேற்று காலையில், ‘மிக மிக முக்கியமான வழக்கு’ விசாரிக்கப்பட உள்ளதாக,உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.

தலைமை நீதிபதி,ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள், அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.அப்போது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதாவது:என் மீது, பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளதாக வந்துள்ள செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கடந்த, 20 ஆண்டுகளாக நீதிபதியாக நேர்மையாக பணியாற்றியதற்கு இதுதான் பரிசா?

இந்தப் புகாரை மறுத்து பேசுவதையே நான் இழி வாக கருதுகிறேன்.நீதிபதிகளுக்கு, அவர்கள் பெறும் நல்ல பெயர்களே, அவர்களுடைய சொத்து. இவ்வாறு பொய் புகார்கள் கூறப்பட்டால், எந்த நியாயமான மனிதனும், நீதிபதி பதவிக்கு வருவதற்கு தயங்குவர்.இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, என்னுடைய வங்கிக் கணக்கில், 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது.

வருங்கால வைப்பு நிதியாக, 40 லட்சம் ரூபாய் இருக்கும். பணத்தின் அடிப்படையில், என் மீது எந்தப் புகாரையும் கூற முடியாது என்பதால், மாற்று வழியை பயன்படுத்தி உள்ளனர்.இந்தப் புகார் நம்பக் கூடியதாக இல்லை. நீதித் துறையை களங்கப் படுத்தவும், தலைமை நீதிபதி அலுவலகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மிகப் பெரிய சக்தி இந்த சதியில் ஈடுபட்டுள்ளது.

வரும் வாரங்களில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இந்த நிலையில், இதுபோன்ற ஒரு மோசடி, பொய் புகார் கூறப்பட்டு உள்ளது.

அவதுாறு

இதனால், நான்பயந்துவிட மாட்டேன். தொடர்ந்து, என்பணிகளை செய்வேன்.புகார் கூறிய அந்த பெண்ணின் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அவருடைய கணவரின் மீதும் வழக்குகள் உள்ளன.இது போன்றவர்கள் கூறியதை நம்பி, எனக்கும், இந்தப் பதவிக்கும் அவதுாறு ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது.இவ்வாறு, அவர்கூறினார்.

இணையதள பத்திரிகைகளில் வந்த செய்தி தொடர்பான வழக்கை, இந்த அமர்வு விசாரித்தது. ஆனால், தீர்ப்புஅளிப்பதில் இருந்து, தலைமை நீதிபதி,ரஞ்சன் கோகோய் விலகிகொண்டார்.

அதையடுத்து, மூத்த நீதிபதியான, நீதிபதி மிஸ்ரா, தீர்ப்பைஅளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன், ஊடகங்கள் சரியாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில், ஊடகங்களுக்கு எந்த தீர்ப்பையும், உத்தரவையும் நாங்கள் அறிவிக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில், எப்படி நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, ஊடகங்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

நீதித்துறையை, பலிகடாவாக்க வேண்டாம் என, ஊடகங்களைகேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், தலைமை நீதிபதி மீது ஜோடிக்கப்பட்டுள்ள புகார், நீதித் துறைக்கு எதிரான தாக்குதல் என, இந்திய பார் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பார் கவுன்சில் தலைவர், மனன் குமார் மிஸ்ரா கூறியதாவது:

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது, பொய்யான, ஜோடிக்கப்பட்ட புகார் கூறப்பட்டு உள்ளது.இது, நீதித் துறையை அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம். இது போன்ற பொய் புகார் கூறியுள்ளதற்கு, கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக இருப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

24ல் விசாரணை

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு, மோசடி வழக்கில் வழங்கப்பட்ட, ஜாமினை ரத்து செய்யக் கோரும் வழக்கு, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக, அந்தப் பெண், தன்னிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக, ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜரைச் சேர்ந்த, நவீன் குமார் என்பவர், டில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.மேலும், அந்த பெண், வேறு சிலருடன் சேர்ந்து தன்னை மிரட்டியதாகவும், நவீன் குமார் புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், டில்லி நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு, கடந்த மாதம், 12ம் தேதி ஜாமின் வழங்கியது.தற்போது, தலைமை நீதிபதி மீது புகார் கூறியுள்ள நிலையில், அந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், டில்லி போலீஸ் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய வழக்குகள்

வழக்கின் விசாரணையின்போது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி, ‘முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், என் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது’ என, குறிப்பிட் டார். ஆனால், எந்தெந்த வழக்குகள் என, அவர் குறிப்படவில்லை.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறிய தாவது:’ரபேல்’ போர் விமானம் தொடர்பான வழக்கில், காங்., தலைவர் ராகுல் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. தன் பதிலை, ராகுல் தாக்கல் செய்ய வேண்டும். சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநிலத் தலைநகர், கோல்கட்டா வின் முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரை, காவலில் எடுத்து விசாரிக்கும், சி.பி.ஐ., மனு மீதான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.

பிரதமர்மோடியின் வாழ்க்கை வரலாறு தொடர் பான திரைபடம் குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.இதைத் தவிர, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற தாக, தமிழகத்தின், வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் வழக்கும் விசாரணை வருகிறது. இவ்வாறு, கூறினர்.

 மேலும், குற்றம்சாட்டிய முன்னாள் உச்சநீதிமன்ற பெண் ஊழியர் மீது ஏற்கனவே மோசடி புகார் கூறப்பட்டதையடுத்து அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் என்றும் செய்திகள் வந்துள்ளன. இந்த நிலையில் பார் கவுன்சிலும் நீதிபதி மீது மீது கூறிய குற்றச்சாட்டுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. புகார் தெரிவிததவர்கள் குற்றப் பின்னணி கொண்டவர்கள் என்பதால் இதிலுள்ள சதியை வெளியே கொண்டு வரவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.  

Tags
Show More
Back to top button
Close
Close