2019 தேர்தல்அரசியல்இந்தியா

அரசியலுக்காக ராகுல்காந்தி ! சொந்த ஆவணங்களில் ராகுல் வின்சியா? இரட்டை பெயர்கள் குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் சரமாரி கேள்வி !

ராகுல் காந்தி தேர்தல் காலங்களில் இந்துக்கள் வாக்குகளை கவர செல்லுமிடங்களில் உள்ள இந்து ஆலயங்களுக்கு சென்று தன்னை இந்து தர்மங்களை காப்பவர்போல காட்டிக்கொண்டு கபட நாடகமாடுவதாக குற்றச்சாட்டு உண்டு. அதே நேரத்தில் மேலை நாடுகளின் பார்வையில் தன்னை ஒரு கிறிஸ்தவராகவே காட்டிக் கொள்வதில் பெருமை அடைகிறார் எனவும் கூறப்படுகிறது.   இந்த நிலையில் ராகுல்காந்தி அமேதி தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது கல்வி சான்றிதழ் குறித்த ஆவணங்களில் ராகுல் வின்சி என குறிப்பிட்டுள்ளது பற்றி பாஜக செய்திதொடர்பாளர் ஜி.வி.நரசிம்மராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

17- வது நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அமேதியிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார். அமேதியில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில், கல்விச் சான்றிதழில் ராகுல் வின்சி என தனது பெயரை குறிப்பிட்டுள்ளார். இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள பாஜக செய்திதொடர்பாளர் ஜி.வி.நரசிம்மராவ், ராகுல் இந்திய குடிமகன் இல்லை என்பது நிரூபணம் ஆவதாகவும், அவரை தேர்தலில் போட்டியிட தடைவிதிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், இந்திய அரசியல் சாசனம் பிரிவு 9-ன்படி இரட்டை குடியுரிமையை இந்திய அரசு அனுமதிப்பதில்லை என குறிப்பிட்டுள்ள ஜி.வி.நரசிம்மராவ் நாட்டு மக்களுக்கு ராகுல்காந்தி இந்த விவகாரத்தில் பதில் சொல்ல கடமை பட்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close