செய்திகள்தமிழ் நாடு

பிரதமர் ₹2 லட்சம், முதல்வர் ₹1 லட்சம் : துறையூர் சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம்

திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழா கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலியாகினர்.

இரங்கல் தெரிவித்து பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், திருச்சி துறையூரை அடுத்த முத்தையாம்பாளையத்தில் நடந்த கோவில் திருவிழாவில் உயிரிழந்தவர்களுக்கு 7 பேர் குடும்பத்திற்கும் ஆழ்ந்த இரங்கலும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ₹2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிதியுதவி அறிவித்துள்ளார். 

இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் இ.பி.எஸ்., உயிர் இழந்தோர் குடும்பத்திற்கு தலா ₹1 லட்சமும், காயம் அடைந்தோர் குடும்பத்திற்கு தலா ₹50,000 வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள தமிழக பா.ஜ.க தலைவர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், “திருச்சி துறையூர் கோவில் நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லாத நிலையில் அந்த குடும்பங்களின் துயரத்தில் பங்கேற்கிறோம். காயமுற்றவர்களை காப்பாற்ற தமிழக அரசு உயர்தர சிகிச்சைகள் அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.”, என்று பதிவிட்டுள்ளார்.

Tags
Show More
Back to top button
Close
Close