2019 தேர்தல்அரசியல்இந்தியாசெய்திகள்

‘மீண்டும் மோடி வேண்டும் மோடி’ பிரார்த்தனையில் தமிழ் பெண் மோட்டார் சைக்கிளில், 30 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து சாதனை !

பிரதமராக மீண்டும் நரேந்திர மோடி வர வேண்டும்’ என, ‘புல்லட்’ மோட்டார் சைக்கிளில், 30 ஆயிரம் கி.மீ., பயணம் செய்து, பிரசாரம் மேற்கொண்டு, தமிழக பெண் சாதனை புரிந்துள்ளார்.

நாடு முழுவதும், லோக்சபா தேர்தல் களை கட்டியுள்ளது. இந்நிலையில், பிரதமராக மீண்டும் மோடியே வர வேண்டும் என வலியுறுத்தி, தமிழகத்தை சேர்ந்த, பா.ஜ., ஆதரவு பெண் ராஜலஷ்மி என்பவர், மோட்டார் சைக்கிளில் நாடு தழுவிய பிரசார பயணம் மேற்கொண்டுள்ளார். புல்லட் மோட்டார் சைக்கிளில், தமிழகத்தில் இருந்து பயணத்தை துவங்கிய, ராஜலஷ்மி, ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சமீபத்தில் வந்தார்.
இரும்பு நகரம் என்று சொல்லப் படும், ஜாம்ஷெட்பூர் நகருக்கு வந்த ராஜலஷ்மி மற்றும் 25 பேர் அடங்கிய அவரது குழுவினருக்கு, உள்ளூர், பா.ஜ.,வினர் வரவேற்பு அளித்தனர்.’ஒவ்வொரு இதயத்திலும் மோடி; ஒவ்வொரு வீட்டிலும் மோடி’ என, அவர் முழக்கமிட்டு, பா.ஜ.,வினரை உற்சாகப்படுத்தினார்.

தன் பயணம் குறித்து, நிருபர்களிடம் ராஜலஷ்மி கூறியதாவது: இதுவரை, 30 ஆயிரம் கி.மீ., புல்லட் மோட்டார் சைக்கிளில் பயணித்து உள்ளோம். மோடியை ஆதரித்து, எங்கள் பயணம் தொடர்கிறது. மோடியின் ஆட்சியில் பெண்களின் முன்னேற்றத்துக்கு பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பெண் குழந்தைகளை பாது காக்கவும், பெண் குழந்தைகளுக்கு கல்வி புகட்டவும், பல திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டது. ஒவ்வொரு பெண்ணுக்கும் சொந்தமாக வீடு கட்டி கொள்ள, எளிதாக கடன் வசதி கிடைத்துள்ளது. அதில் பயனடைந்தவர்களில் நானும் ஒருவர்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags
Show More
Back to top button
Close
Close