2019 தேர்தல்செய்திகள்

சிவசேனா-வில் இணைந்தார் காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தி தொடர்பாளர் : காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த பேரிடி

காங்கிரஸ் கட்சியில் அடியாட்களுக்குத்தான் முக்கியத்துவம் என்று அக் கட்சியின் தலைமை அலுவலக செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி கோபத்துடன் தெரிவித்திருந்தார்.

உத்தரபிரதேசத்தின் மதுராவில் சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பின்போது, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதியிடம் வரம்புமீறி நடந்து கொண்டதாக அக்கட்சியை சேர்ந்த சிலருக்கு இடைக்கால தடைவிதித்து அக்கட்சி உத்தரவிட்டிருந்தது. அந்தத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பிரியங்கா சதுர்வேதி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கட்சியை கடுமையாக சாடினார். கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்களை விட அடியாட்களுக்குத்தான் காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

காங்சிரசிற்காக கட்சியிலேயே விமர்சனங்களையும், தாக்குதல்களையும் தான் சந்தித்துவரும் நிலையில், தன்னை மிரட்டியவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைக்காதது வருத்தமளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து தனது செய்தி தொடர்பாளர் பதவியை அவர் ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளை தான் துறப்பதாக ராகுல்காந்திக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்தார்.

காங்கிரசில் இருந்து விலகிய அக்கட்சி செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, சிவசேனாவில் இணைந்துள்ளார். இது காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாக கருதப்படுகிறது.

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில் வசித்த பிரியங்கா சதுர்வேதி, நிதி நிறுவனம் மற்றும் விளம்பர கம்பெனியின் இயக்குனராக இருந்தார். தொடர்ந்து 2010 ல் இளைஞர் காங்கிரசில் இணைந்தார். 2012 ல் மேற்கு மும்பை இளைஞர் காங்கிரஸ் பொது செயலராக தேர்வு செய்யப்பட்டார். சமூக வலைதளங்களில் அவரின் துரிதமான செயல்பாடு காரணமாக 2013ல் அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக , நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் காங்கிரசின் சமூக வலைதள பக்கங்களை பிரியங்கா தான் கவனித்து வந்தார். 2016 ல், இந்தியாவில் வளரும் பெண் தலைவராக தேர்வானார்.

Tags
Show More
Back to top button
Close
Close